பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு கெவின் ஸ்பேசி மறுப்பு

By ஐஏஎன்எஸ்

தன் மீதான் பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு நடிகர் கெவின் ஸ்பேசி மறுப்பு தெரிவித்துள்ளார்.

'அமெரிக்கன் பியூட்டி’, ’செவன்’, 'யூசுவல் சஸ்பெக்ட்ஸ்', 'பேபி டிரைவர்', 'சூப்பர்மேன் ரிட்டர்ன்ஸ்' உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்துப் புகழ்பெற்றவர் கெவின் ஸ்பேசி. கடந்த 2017ஆம் ஆண்டு சிறுவர்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டு அதற்கான தண்டனை பெற்றார். அதனைத் தொடர்ந்து பலரும் அவர் மீது தொடர் பாலியல் குற்றச்சாட்டுகளை வைத்தனர். இதனால் அவர் நடித்துக் கொண்டிருந்த பல திரைப்படங்களில் இருந்து நீக்கப்பட்டார். அதன் பிறகு திரைப்படங்கள், பொது நிகழ்ச்சிகள், பேட்டிகள் என எதிலும் தலைகாட்டாமல் இருந்தார் கெவின் ஸ்பேசி.

இந்நிலையில் அந்தோணி ராப் என்ற நடிகர், தான் 14 வயதுச் சிறுவனாக இருந்தபோது கெவின் ஸ்பேசி தன்னை பார்ட்டிக்கு அழைத்து அங்கு தன்னிடம் பாலியல்ரீதியாக அத்துமீறியதாக 2017ஆம் ஆண்டு குற்றம் சாட்டியிருந்தார். அந்த வழக்கு தற்போது நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது.

இவ்வழக்கில் நேற்று ஆஜரான கெவின் ஸ்பேசி தன் மீது அளிக்கப்பட்ட பாலியல் புகார் பொய்யானது என்று கூறியுள்ளார்.

1980களில் தான் நடித்த ஒரு படத்தில் அந்தோணியும் ஒரு நடிகராக இருந்ததாகவும், அவரை ஒரு சில முறையே சந்தித்துள்ளதாகவும், பெரிய அளவில் அவரிடம் பேசியதில்லை என்றும் கெவின் ஸ்பேசி கூறியுள்ளார்.

மேலும், தான் எந்த பார்ட்டிக்கும் அந்தோணியை அழைக்கவில்லை என்றும், அவரிடம் எந்தவொரு தவறான நடவடிக்கையிலும் தான் ஈடுபடவில்லை என்றும் கெவின் ஸ்பேசி மறுத்துள்ளார்.

இதேபோன்று சி.டி என்பவர் தனது அடையாளத்தை மறைத்து தொடுத்த வழக்கில் தன்னுடைய இளம் வயதில் கெவின் ஸ்பேசி தன்னைப் பாலியல் துன்புறுத்தல் செய்ததாகக் குறிப்பிட்டுள்ளார். இந்தக் குற்றச்சாட்டையும் கெவின் ஸ்பேசி மறுத்துள்ளார். மேலும் சி.டி என்பவர் தனது அடையாளத்தை வெளிப்படுத்த வேண்டும் என்றும் அவர் கோரிக்கை வைத்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

17 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

20 hours ago

மேலும்