‘டெட்பூல்’ மூன்றாம் பாகத்துக்கான பணிகளை மார்வெல் நிறுவனம் தொடங்கியுள்ளது.
மார்வெல் காமிக்ஸின் புகழ்பெற்ற கதாபாத்திரம் ‘டெட்பூல்’. இதனை அடிப்படையாகக் கொண்டு டெட்பூல் 1 மற்றும் 2 ஆகிய திரைப்படங்களில் 20ஆம் சென்சுரி ஃபாக்ஸ் நிறுவனம் தயாரித்தது. இவ்விரண்டு படங்களும் உலகமெங்கும் நல்ல வரவேற்பைப் பெற்றதால் தற்போது இதன் மூன்றாம் பாகத்துக்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
கடந்த ஆண்டு 20ஆம் சென்சுரி ஃபாக்ஸ் நிறுவனத்தை டிஸ்னி நிறுவனம் வாங்கி விட்டதால், ஏற்கெனவே டிஸ்னி கட்டுப்பாட்டில் இருக்கும் மார்வெல் நிறுவனமே நேரடியாக இப்படத்தைத் தயாரிக்கவுள்ளது. மேலும், இப்படத்தின் மூலும் மார்வெல் சினிமாடிக் உலகத்தோடு டெட்பூல் கதாபாத்திரம் இணைக்கப்படவுள்ளது.
இந்நிலையில் எம்மி விருது பெற்ற பிரபல கதாசிரியர்களான மாலீனோ சகோதரிகள் இப்படத்தின் திரைக்கதையை எழுதவுள்ளனர். மேலும் முதல் இரண்டு பாகங்களில் டெட்பூல் கதாபாத்திரத்தில் நடித்த ரயான் ரெனால்ட்ஸே இப்படத்திலும் நடிக்கவுள்ளார்.
» இந்தியாவில் டிச.4ஆம் தேதி வெளியாகிறது ‘டெனெட்’- டிம்பிள் கபாடியா அறிவிப்பு
» தன் பெயரைப் பயன்படுத்தி போலி தொலைபேசி அழைப்புகள் - ‘பிரேமம்’ இயக்குநர் போலீஸில் புகார்
மாலீனோ சகோதரிகள் பாப்’ஸ் பர்கர் என்னும் தொடருக்காக எம்மி விருது வென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நகைச்சுவை வசனங்கள், மற்றும் சுயபகடி ஆகியவற்றுக்கு பேர் போன டெட்பூல் கதாபாத்திரத்தின் அடுத்த படம் பற்றிய அறிவிப்பு ஹாலிவுட் ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முக்கிய செய்திகள்
சினிமா
25 mins ago
சினிமா
37 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago