ஆக்‌ஷனும் உணர்ச்சிகளும் கலந்த கலவை: ‘பெனின்சுலா’ படம் குறித்து இயக்குநர் பகிர்வு

By ஐஏஎன்எஸ்

ஆக்‌ஷனும் உணர்ச்சிகளும் கலந்த கலவையாக ‘பெனின்சுலா’ திரைப்படத்தை உருவாக்கியிருப்பதாக இயக்குநர் யன் சேங் ஹோ கூறியுள்ளார்.

2016ஆம் ஆண்டு கொரிய இயக்குநர் யன் சேங் ஹோ இயக்கத்தில் வெளியான படம் ‘ட்ரைன் டூ பூசான்’. ஜோம்பி த்ரில்லர் வகை திரைப்படமான இது உலக அளவில் பெரும் வெற்றி பெற்றது. தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளிலும் டப் செய்யப்பட்டு நல்ல வரவேற்பைப் பெற்றது.

இப்படத்தின் தொடர்ச்சியான ‘பெனின்சுலா’ திரைப்படம் கடந்த ஜூலை மாதம் தென் கொரியாவில் வெளியானது. அப்போது இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் கரோனா காரணமாகத் திரையரங்குகள் மூடப்பட்டிருந்தன. இதனால் இப்படத்தை மீண்டும் வெளியிடத் தயாரிப்பாளர்கள் திட்டமிட்டுள்ளனர். அதன்படி வரும் நவம்பர் 27ஆம் தேதி இந்தியாவில் ‘பெனின்சுலா’ திரைப்படம் வெளியாகிறது. இதற்கான ட்ரெய்லர் கடந்த சில தினங்களுக்கு முன்பு இணையத்தில் வெளியானது.

இந்நிலையில் இப்படம் குறித்து இயக்குநர் யன் சேங் ஹோ கூறியிருப்பதாவது:

''ஆக்‌ஷனும் உணர்ச்சிகளும் கலந்த கலவையாக இந்தப் படத்தை உருவாக்கியுள்ளோம். நடிகர் கேங் டான் - வோன் மட்டுமே நடிக்கக்கூடிய வகையில் அதற்கேற்ற ஒரு கதாபாத்திரத்தை வடிவமைத்துள்ளோம். பார்வையாளர்களை மூழ்கடிக்கக்கூடிய உணர்ச்சிகளை அவர் தன் கண்களாலேயே வெளிப்படுத்தியுள்ளார்''.

இவ்வாறு இயக்குநர் யன் சேங் ஹோ கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்