‘ஒன்ஸ் அபான் எ டைம் இன் ஹாலிவுட்’ படத்தின் திரைக்கதை, புத்தகமாக வெளியாகவுள்ளது.
ஹாலிவுட்டின் பிரபல இயக்குநராக இருப்பவர் க்வெண்டின் டாரண்டினோ. ‘பல்ப் ஃபிக்ஷன்’, ‘கில் பில்’,‘ஜாங்கோ அன்செயிண்ட்’ உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களை இயக்கியுள்ளார். கடந்த ஆண்டு டாரண்டினோ இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘ஒன்ஸ் அபான் எ டைம் இன் ஹாலிவுட்’. இப்படம் உலகம் முழுவதும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இப்படத்தில் நடித்த ப்ராட் பிட்டுக்கு சிறந்த துணை நடிகருக்கான ஆஸ்கர் விருது கிடைத்தது.
இந்நிலையில் இப்படத்தின் திரைக்கதை, புத்தகமாக வெளியாகவுள்ளது. இதுகுறித்து டாரண்டினோ கூறியுள்ளதாவது:
''70களில் திரைக்கதை புத்தகங்களைத்தான் நான் முதன்முதலில் படிக்கத் தொடங்கினேன். இன்றுவரை அந்தவகை புத்தகங்களின் மேல் எனக்கு மிகப் பெரும் ஈர்ப்பு உண்டு. எனவே ஒரு திரைக்கதை புத்தக வாசகனாக, ‘ஒன்ஸ் அபான் எ டைம் இன் ஹாலிவுட்’ படத்தின் திரைக்கதையைப் புத்தகமாக வெளியிடுவதில் மகிழ்ச்சியடைகிறேன். இலக்கியத்துக்கு என்னாலான சிறு பங்களிப்பு இது. என்னுடைய கதாபாத்திரங்களையும் அவற்றின் உலகங்களையும் ஆய்வு செய்யக் காத்திருக்கிறேன்''.
இவ்வாறு டாரண்டினோ கூறியுள்ளார்.
வரும் 2021ஆம் ஆண்டு ஹார்பர் காலின்ஸ் நிறுவனம் இப்புத்தகத்தை வெளியிடுகிறது.
முக்கிய செய்திகள்
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago