‘அக்வாமேன் 2’ படத்திலிருந்து விலகலா? - ஆம்பர் ஹேர்ட் விளக்கம்

By ஐஏஎன்எஸ்

பிரபல ஹாலிவுட் நடிகர் ஜானி டெப் தனது மனைவியான ஆம்பர் ஹேர்டை அடித்துத் துன்புறுத்தியதாக லண்டனில் வெளியாகும் பிரபல பத்திரிகை ஒன்று கட்டுரை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு எதிராக ஜானி டெப் தொடர்ந்து வழக்கில் தீர்ப்பு அவருக்கு எதிராக வந்தது. இதனால் ஜானி டெப் தான் நடித்து வந்த ‘பென்டாஸ்டிக் பீஸ்ட்’ படத்திலிருந்து விலகுவதாக அறிவித்தார்.

இந்நிலையில் ஜானி டெப்பின் மனைவியான ஆம்பர் ஹேர்டும் ‘அக்வாமேன் 2’ படத்திலிருந்து விலகியுள்ளதாக கடந்த சில தினங்களால சமூக வலைதளங்களில் தகவல் வெளியாகி வந்தது. இதற்கு ஆம்பர் ஹேர்ட் மறுப்பு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியுள்ளதாவது:

பணத்துக்காக வெளியிடப்படும் வதந்திகளும், பொய்ப் பிரச்சாரங்களும் நடிகர்கள் தேர்வை தீர்மானிப்பதில்லை. ஏனெனில் அவற்றுக்கும் நிஜ உலகுக்கும் எந்தவித தொடர்புமில்லை. ரசிகர்களால் மட்டுமே ‘அக்வாமேன்’ மற்றும் ‘அக்வாமேன் 2’ இரண்டு படங்களும் சாத்தியமாயின. அடுத்த ஆண்டு படப்பிடிப்பை தொடங்க ஆவலுடன் காத்திருக்கிறேன்.

இவ்வாறு ஆம்பர் ஹேர்ட் கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்