படப்பிடிப்பில் இருக்கும் 'ஸ்பைடர் மேன் 3' திரைப்படத்தின் புகைப்படத்தைப் படத்தின் நாயகன் டாம் ஹாலண்ட் பகிர்ந்துள்ளார்.
மார்வல் திரையுலகப் பிரபஞ்சத்தின் திரை வரிசை ஆரம்பிப்பதற்கு முன்பே ஸ்பைடர் மேன் கதாபாத்திரத்துக்கான உரிமத்தை சோனி பிக்சர்ஸ் நிறுவனம் வாங்கியிருந்தது. 2002 ஆம் ஆண்டு முதல் 'ஸ்பைடர் மேன்' திரைப்படங்களைத் தயாரித்து வெளியிட்டு வருகிறது.
மார்வல் திரை வரிசை ஆரம்பித்த பின் ஸ்பைடர்மேன் அதில் இணையவில்லை. கதாபாத்திர உரிமத்துக்கான சிக்கல் இருந்ததால் சோனி தரப்பும், டிஸ்னி தரப்பும் பேச்சுவார்த்தை நடத்தி ஸ்பைடர்மேன் கதாபாத்திரத்தை மார்வல் பிரபஞ்சத்துக்குள் இணைத்தன. இதன் பின் 'ஸ்பைடர்மேன் ஹோம்கமிங்', 'ஸ்பைடர்மேன் ஃபார் ஃப்ரம் ஹோம்' ஆகிய தனித் திரைப்படங்கள் வெளியாகின. இதில் 'ஃபார் ஃப்ரம் ஹோம்' இதுவரை வெளியான ஸ்பைடர்மேன் திரைப்படங்களில் அதிக வசூல் என்ற சாதனையைப் படைத்தது.
ஆனால், கடந்த வருடம் இரு தரப்புக்கும் லாபத்தைப் பகிர்வது குறித்து கருத்து வேறுபாடு வந்து, இனி ஸ்பைடர்மேன் மார்வல் திரைப்படங்களில் தோன்றுவது கடினம் என்ற சூழல் உருவானது. ஆனால் அவெஞ்சர்ஸ் கதாபாத்திரங்களுடன் ஸ்பைடர்மேன் தோன்றிய பிறகு அதற்கான ரசிகர் கூட்டம் கூடியதால், உலகம் முழுவதிலுமிருந்து பல ரசிகர்கள் ஸ்பைடர்மேன் மீண்டும் மார்வல் பிரபஞ்சத்துக்குள் சேர வேண்டும் என்று கேட்க ஆரம்பித்தனர்.
» பிளாக் பேந்தருக்கு மட்டும் தான் கறுப்பினக் கலைஞர்களா? - மார்வலைக் கேள்வி கேட்கும் ஆந்தனி மாக்கீ
» டிஸ்னி, மார்வல் படங்களின் படப்பிடிப்பு இப்போதைக்குத் தொடங்கப்படாது
பின் ஒருவழியாக இரு தயாரிப்புத் தரப்பும் சமரசம் செய்துகொண்டு, 'ஸ்பைடர்மேன் 3' படத்துக்கான வேலைகளைத் தொடங்கின. தற்போது இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. படத்தின் நாயகன் டாம் ஹாலண்ட், படப்பிடிப்பிலிருந்து ஒரு புகைப்படத்தைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இந்தப் புகைப்படத்தில் ஸ்பைடர்மேன் உடையில் இருக்கும் ஹாலண்ட், அதன் மேல் ஒரு முகக் கவசத்தையும் அணிந்திருக்கிறார். இதோடு, "முகக்கவசம் அணியுங்கள், நான் இரண்டு அணிந்திருக்கிறேன்" என்று குறிப்பிட்டுப் பதிவிட்டுள்ளார். கரோனா காலத்தில் ரசிகர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவே அவர் இப்படிப் பதிவிட்டிருப்பதாகத் தெரிகிறது.
2021ஆம் வருடம் டிசம்பர் மாதம் 'ஸ்பைடர்மேன் 3' வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
சினிமா
28 mins ago
சினிமா
2 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago