ஸ்டுடியோக்கள் 'டெனட்'டை வைத்துத் தவறான முடிவுக்கு வருகின்றன: கிறிஸ்டோஃபர் நோலன்

By பிடிஐ

ஹாலிவுட் ஸ்டுடியோக்கள் 'டெனட்' படத்திடின் ஓட்டத்தை வைத்துத் தவறான முடிவுக்கு வருவதாக இயக்குநர் கிறிஸ்டோஃபர் நோலன் தெரிவித்தார்.

நீண்ட ஊரடங்குக்குப் பிறகு சர்வதேச அளவில் சில நாடுகளில் திரையரங்குகள் திறந்தபின் வெளியான முதல் பெரிய பட்ஜெட் திரைப்படம் 'டெனட்'. கிறிஸ்டோஃபர் நோலன் இயக்கத்தில் ஜான் டேவிட் வாஷிங்டன், ராபர்ட் பேட்டின்ஸன், டிம்பிள் கபாடியா உள்ளிட்டோர் நடித்திருந்த இந்தப் படத்துக்குக் கலவையான விமர்சனங்களும் இரண்டு மாதங்களில் 350 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வசூலும் கிடைத்தன. இந்தப் படம் தோல்விப் படமா அல்லது வெற்றிப் படமா என்பது குறித்து இன்னும் விவாதங்கள் நடந்து வருகின்றன.

சமீபத்தில் நாளிதழ் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில், படத்தின் வசூலில் தனக்கு மகிழ்ச்சியென்றே இயக்குநர் நோலன் கூறியுள்ளார். ஆனால், மற்ற ஸ்டுடியோக்கள் எதிர்பார்த்த அளவுக்குப் படம் வசூலிக்கவில்லை என்று கூறியுள்ளார்.

"எங்கள் படத்தை வைத்து மற்ற ஸ்டுடியோக்கள் தவறான முடிவுக்கு வருகின்றன என்பது கவலையளிக்கிறது. எந்தப் பகுதியில் படம் ஓடியிருக்கிறது, அது எப்படி தங்களுக்கு வருமானத்தைத் தரும் என்பதைப் பார்க்காமல் கோவிட்டுக்கு முந்தைய நிலையுடன் ஒப்பிட்டு அந்த அளவுக்குப் படம் ஓடவில்லை என்று கூறுகின்றனர்.

சந்தை நிலவரத்துக்கு ஏற்ப மாறாமல், வியாபாரத்தை மீண்டும் கட்டமைக்காமல் இதை ஒரு காரணமாக வைத்து திரையரங்கத்தில் திரையிட்டால் நஷ்டம் என்று கூறுவார்கள். உணவகங்களுக்கும், மற்ற பொது இடங்களுக்கும் செல்வது போல திரையரங்குக்குச் சென்று படம் பார்ப்பது என்பதும் வாழ்க்கையில் ஓர் அங்கம். அது எதிர்காலத்தில் தொடரும். ஆனால் இப்போதைக்குப் புதிய உலகுக்கு ஏற்ப எல்லோரும் வாழக் கற்றுக் கொள்ளத்தான் வேண்டும்" என்று நோலன் பேசியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்