பேட்வுமன் புதிய லுக் வெளியீடு

By ஐஏஎன்எஸ்

பேட்வுமன் கதாபாத்திரத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை டிசி நிறுவனம் வெளியிட்டுள்ளது.

டிசி காமிக்ஸின் புகழ்பெற்ற கதாபாத்திரம் பேட்மேன். உலகம் முழுவதும் ரசிகர்களைக் கொண்ட இந்தக் கதாபாத்திரம், திரைப்படங்கள் மற்றும் டிவி தொடர்களில் இடம்பெற்று பெரும் வரவேற்பைப் பெற்றது. இதுவரை பேட்மேன் கதாபாத்திரத்தில் மைக்கேல் கீட்டன், ஜார்ஜ் க்ளூனி, க்றிஸ்டியன் பேல், பென் அஃப்ளெக் உள்ளிட்ட பெரும் நடிகர்கள் நடித்துள்ளனர்.

இந்தச் சூழலில் காமிக்ஸில் பேட்மேன் கதாபாத்திரத்துக்கு இணையான வரவேற்பைப் பெற்ற ஒரு கதாபாத்திரம் பேட்வுமன். இந்தக் கதாபாத்திரத்துக்கென்று தனியே காமிக்ஸ் கதைகள் எழுதப்பட்டிருந்தாலும் தனியாக இதுவரை திரைப்படங்கள் எடுக்கப்படவில்லை. கார்ட்டூன் வடிவில் வெளியான திரைப்படங்களும் போதிய வரவேற்பைப் பெறவில்லை.

இந்தச் சூழலில் பேட்வுமன் கதாபாத்திரத்தை முன்னிறுத்தி டிசி காமிக்ஸ் நிறுவனம் 2019 ஆம் ஆண்டு ஒரு வெப்சீரிஸை வெளியிட்டது. இது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்த ஆண்டு வெளியாகவிருந்த பேட்வுமன் சீசன் 2, கரோனா அச்சுறுத்தலால் அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த சீசனில் கருப்பினத்தைச் சேர்ந்த பெண்ணான ஜவிசியா லெஸ்லி பேட்வுமனாக நடிக்கவுள்ளார். இதற்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை டிசி நிறுவனம் நேற்று வெளியிட்டது. இந்த போஸ்டரில் திருத்தியமைக்கப்பட்ட பேட்வுமன் சூட் இடம்பெற்றுள்ளது.

டிசி ரசிகர்கள் பலரும் இந்த போஸ்டரை தங்கள் சமூக வலைதளப் பக்கங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்