உடற்பயிற்சி செய்யும்போது தன் முகத்தில் காயம்பட்டது குறித்து நடிகர் ட்வைன் ஜான்ஸன் காணொலி வெளியிட்டுள்ளார்.
48 வயதான நடிகர் ட்வைன் ஜான்ஸன் முன்னாள் பொழுதுபோக்கு மல்யுத்த வீரர். அதில் கிடைத்த புகழின் மூலம் ஹாலிவுட்டுக்குள் நுழைந்து தற்போது முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருகிறார். உடலைக் கச்சிதமாக வைத்திருக்க தினமும் கடுமையாக உடற்பயிற்சி செய்யும் ஜான்ஸன், சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காணொலி ஒன்றைப் பகிர்ந்துள்ளார். இதில் 50 பவுண்ட் எடையை வைத்து உடற்பயிற்சி செய்யும்போது முகத்தில் பட்ட ரத்த காயத்தை படம்பிடித்துக் காட்டியுள்ளார்.
"சரி, இங்கே பாருங்கள். சில நேரங்கள், உடற்பயிற்சிக் கூடத்தில் சூழல் சற்று தீவிரமாகும். நாங்கள் இங்கு குழந்தைகள் விளையாட்டோ, குழந்தைப் பாடல்களோ பாடவில்லை. இப்படி அவ்வப்போது அடிபடும், இப்படி நடக்கும்" என்று பேசிப் பதிவிட்டுள்ளார்.
இந்தக் காணொலியில் அவர் கண்களுக்கு அருகில் ரத்தம் வழிந்து ஓடுகிறது. அதை விரல்களால் துடைத்து விட்டு சிறிது ரத்தத்தை ருசி பார்க்கிறார் ஜான்ஸன். விரலைச் சுத்தம் செய்துவிட்டு இது மிக நன்றாக இருக்கிறது என்று கூறிவிட்டு மீண்டும் உடற்பயிற்சிக்குச் செல்கிறார்.
» படப்பிடிப்புக்குச் செல்ல வீட்டின் கேட்டை உடைத்த ட்வைன் ராக் ஜான்சன்
» சூப்பர் ஹீரோ உலகின் படிநிலையே மாறும்: 'ப்ளாக் ஆடம்' திரைப்படம் குறித்து ட்வைன் ஜான்ஸன்
இந்தக் காணொலியுடன், "50 பவுண்ட் எடையைத் தூக்கிப் போடும்போது அடிபட்டது. இதற்கு தையல்கள் தேவை. ரத்தத்தைச் சுவைத்து விட்டு, தொடர்ந்து பயிற்சி மேற்கொண்டு பின்னர் சிகிச்சை செய்து கொள்ளலாம். இதுதான் இந்தக் கூடத்தின் விதிமுறை. எனது ரத்தம் சாஸைப் போல, டெகிலாவைப் போல சுவையாக இருப்பதை நான் உறுதிப்படுத்துகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
தற்போது 'ப்ளாக் ஆடம்' என்கிற சூப்பர் ஹீரோ திரைப்படத்தில் ஜான்ஸன் நடித்து வருகிறார்.
முக்கிய செய்திகள்
சினிமா
26 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
3 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago