மீண்டும் பழைய ஸ்பைடர்மேன்கள்? - சோனி நிறுவனம் விளக்கம்

By ஐஏஎன்எஸ்

பழைய ஸ்பைடர்மேன்களான டோபி மேக்யூர் மற்றும் ஆண்ட்ரூ கார்ஃபீல்ட் இருவரும் புதிய ஸ்பைடர்மேன் படத்தில் நடிக்கவுள்ளதாக வெளியான தகவல் குறித்து சோனி நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

சோனி-மார்வல் இணை தயாரிப்பாக, 2019 ஆம் ஆண்டு வெளியான 'ஸ்பைடர்மேன் ஃபார் ஃப்ரம் ஹோம்' மிகப்பெரிய வெற்றி பெற்றதைத் தொடர்ந்து அடுத்த பாகத்துக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். ஆனால், திடீரென சோனி- மார்வல் நிறுவனங்களுக்கிடையே காப்புரிமை தொடர்பான பிரச்சினை வந்து இரண்டு நிறுவனங்களும் பிரிவதாக அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து நடந்த இறுதிக்கட்டப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் தற்போது ஸ்பைடர்மேன் பட வரிசையில் அடுத்த பாகத்தை இரண்டு தரப்பும் சேர்ந்தே தயாரிக்கின்றன.

கடந்த ‘ஸ்பைடர்மேன்’ படங்களில் முக்கியப் பாத்திரங்களாக நடித்த டாம் ஹாலண்ட், ஜிண்டாயா, மாரிஸா டோமீ உள்ளிட்ட அனைவருமே இந்தப் படத்திலும் நடித்து வருகின்றனர். மேலும் 2014 ஆம் ஆண்டு வெளியான ‘தி அமேசிங் ஸ்பைடமேன்’ திரைப்படத்தில் வில்லனாக நடித்த ஜேமி ஃபாக்ஸ் நடிக்கவுள்ளார்.

இந்நிலையில் 2002 ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்ற ‘ஸ்பைடர்மேன்’ படத்தில் ஸ்பைடர்மேனாக நடித்த டோபி மேக்யூர் மற்றும் ‘தி அமேசிங் ஸ்பைடமேன்’ படத்தில் ஸ்பைடர்மேனாக நடித்த ஆண்ட்ரூ கார்ஃபீல்ட் இருவரும் இப்படத்தில் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியான வண்ணம் இருந்தது.

ஆனால் இதுகுறித்த அறிக்கை வெளியிட்டுள்ள சோனி நிறுவனம், ''இதுபோன்ற கற்பனையான நடிகர் தேர்வுகள் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை'' என்று கூறியுள்ளது.

இப்படம் அடுத்த ஆண்டு டிசம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்