வார்னர் பிரதர்ஸ் நிறுவனம் தங்களது முக்கியமான பிரம்மாண்டத் தயாரிப்புகளின் அனைத்து வெளியீட்டுத் தேதிகளையும் ஒத்திவைப்பதாக அறிவித்துள்ளது.
கரோனா நெருக்கடியால் உலக அளவில் திரைப்படத் துறையும் பாதிக்கப்பட்டுள்ளது. மார்ச் மாதத்திலிருந்து பல திரைப்படங்களின் படப்பிடிப்பு உள்ளிட்ட வேலைகள் தடைப்பட்டன. திரையரங்குகள் மூடப்பட்டதால் திரைப்படங்களின் வெளியீடுகளும் ஒத்திவைக்கப்பட்டன.
கடந்த சில மாதங்களில் பல திரைப்படங்களின் வெளியீட்டுத் தேதிகளை ஹாலிவுட் தயாரிப்பு நிறுவனங்கள் அடுத்த வருடத்துக்கோ அல்லது 2022 ஆம் ஆண்டுக்கோ ஒத்திவைத்து தொடர்ந்து அறிவிப்பு வெளியிட்டு வருகின்றனர்.
உலகின் சில நாடுகளில் கடந்த மாதம் திரையரங்குகள் திறக்கப்பட அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால், கரோனா அச்சம் காரணமாக மக்கள் திரையரங்குக்கு வரும் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ளது. சமீபத்தில் வெளியான வார்னர் பிரதர்ஸ் நிறுவனத்தின் 'டெனெட்' திரைப்படத்தின் சுமாரான வசூலே இதற்கு சாட்சி.
» 543 திரையரங்குகள் தற்காலிக மூடலா?- ட்விட்டரில் சினிவேர்ல்ட் பகிர்வு
» மீண்டும் ஒத்திவைக்கப்பட்ட 'வொண்டர் வுமன்' ரிலீஸ் - க்றிஸ்துமஸ் தினத்தன்று வெளியாகிறது
இந்நிலையில், கரோனா நெருக்கடி காரணமாக ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்ட, அமெரிக்காவின் இரண்டாவது மிகப்பெரிய திரையரங்கச் சங்கிலியான ரீகல் சினிமாஸ், தங்களின் 400க்கும் மேற்பட்ட திரையரங்குகளைத் தற்காலிகமாக மூடுவதாக அறிவித்தது. பிரிட்டனில் இருக்கும் சினிவேர்ல்ட்தான் ரீகல் சினிமாஸின் தாய் நிறுவனம். சினிவேர்ல்டும் பிரிட்டனில் இருக்கும் தங்களது திரையரங்குகளை மூடுவதாக அறிவித்துள்ளது.
இந்தச் சூழல் அனைத்தையும் மனதில் கொண்டு, 'ட்யூன்', 'தி பேட்மேன்' உள்ளிட்ட தங்களது முக்கியத் தயாரிப்புகளின் வெளியீடுகளை வார்னர் பிரதர்ஸ் ஒத்திவைத்துள்ளது. இதில் 'மேட்ரிக்ஸ் 4' திரைப்படத்தின் வெளியீடு மட்டும் முன்கூட்டியே இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த வருடம் டிசம்பர் மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த 'வொண்டர் வுமன் 2' திரைப்படத்தின் வெளியீட்டில் எந்தவித மாற்றமும் இல்லை.
டிசம்பர் 2020-ல் வெளியாகவிருந்த 'ட்யூன்' தற்போது அக்டோபர் 1, 2021 அன்று வெளியாகும்.
'தி பேட்மேன்' அக்டோபர் 1, 2021 அன்று வெளியாகவிருந்தது. தற்போது மார்ச் 4, 2022 அன்று வெளியாகும்.
ஜூன் 3, 2022-ல் வெளியாக இருந்த 'தி ஃப்ளாஷ்' நவம்பர் 4, 2022க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
'ஷஸாம் 2' நவம்பர் 4, 2022 என்கிற தேதியிலிருந்து ஜூன் 2, 2023க்கு மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
டிசம்பர் 22, 2021 அன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த 'ப்ளாக் ஆடம்' திரைப்படமும் தற்போது தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, ஜேம்ஸ் பாண்ட் 'நோ டைம் டு டை', மார்வலின் 'ப்ளாக் விடோ' ஆகிய திரைப்படங்களின் வெளியீடுகளை அந்தந்தத் தயாரிப்பு நிறுவனங்கள் இன்னும் ஒத்திவைப்பதாக அறிவித்தன. இதன் தொடர் விளைவாகத்தான் சினிவேர்ல்ட் திரையரங்க உரிமையாளர்களின் அறிவிப்பு, வார்னர் பிரதர்ஸ் நிறுவனத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
16 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago