'ஸ்பைடர்மேன்' அடுத்த பாகத்தில் வில்லன் எலெக்ட்ரோ கதாபாத்திரத்தில் ஜேமீ ஃபாக்ஸ் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
சோனி-மார்வல் இணை தயாரிப்பாக, 2019 ஆம் ஆண்டு வெளியான 'ஸ்பைடர்மேன் ஃபார் ஃப்ரம் ஹோம்' மிகப்பெரிய வெற்றி பெற்றதைத் தொடர்ந்து அடுத்த பாகத்துக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். ஆனால், திடீரென சோனி- மார்வல் நிறுவனங்களுக்கிடையே காப்புரிமை தொடர்பான பிரச்சினை வந்து இரண்டு நிறுவனங்களும் பிரிவதாக அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து நடந்த இறுதிக்கட்டப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் தற்போது ஸ்பைடர்மேன் பட வரிசையில் அடுத்த பாகத்தை இரண்டு தரப்பும் சேர்ந்தே தயாரிக்கின்றன.
கடந்த ‘ஸ்பைடர்மேன்’ படங்களில் முக்கியப் பாத்திரங்களாக நடித்த டாம் ஹாலண்ட், ஜிண்டாயா, மாரிஸா டோமீ உள்ளிட்ட அனைவருமே இந்தப் படத்திலும் நடித்து வருகின்றனர். வழக்கமாக 'ஸ்பைடர்மேன்' பட வில்லன்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெறுகின்றனர். அந்த வகையில் இந்தப் படத்தில் வில்லன் யார் என்ற கேள்வியை ரசிகர்கள் முன்வைத்து வந்தனர்.
இந்நிலையில் மார்வெல் காமிக்ஸின் புகழ்பெற்ற வில்லன்களில் ஒருவராக ‘எலெக்ட்ரோ’ கதாபாத்திரமே இப்படத்தின் வில்லன் என்று சோனி தரப்பில் கூறப்பட்டுள்ளது. இந்தக் கதாபாத்திரத்தில் ஜேமீ ஃபாக்ஸ் நடிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
» அடுத்த ஆண்டுக்குத் தள்ளிப்போன ‘நோ டைம் டு டை’ - ஜேம்ஸ் பாண்ட் ரசிகர்கள் அதிருப்தி
» அனுராக் போலீஸாரிடம் பொய் கூறுகிறார்: பாயல் கோஷ் குற்றச்சாட்டு
ஸ்பைடர்மேன் படங்களை மார்வெல் சினிமா உலகம் கையிலெடுப்பதற்கு முன்பு வெளியான ‘தி அமேசிங் ஸ்பைர்மேன் - 2’ படத்தில் தோன்றிய எலெக்ட்ரோ கதாபாத்திரத்தில் நடித்தவரும் இதே ஜேமீ ஃபாக்ஸ்தான். படம் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறாத நிலையில் ஃபாக்ஸின் கதாபாத்திரம் பெரிதும் பேசப்பட்டது. எனவே, இதனைக் கருத்தில் கொண்டு அடுத்த படத்தில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
23 hours ago