2009-ம் ஆண்டுக்குப் பிறகு முதல்முறையாக இந்த ஆண்டு மார்வெல் படம் வெளியாகாதது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
கடந்த 2008ஆம் ஆண்டு வெளியான ‘அயர்ன்மேன்’ திரைப்படம் மூலம் மார்வெல் சினிமா உலகத்தின் பயணம் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து ‘ஹல்க்’, ‘அயர்ன்மேன் 2’, ‘தார்’, ‘கேப்டன் அமெரிக்கா’, ‘அவெஞ்சர்ஸ்’ ஆகிய படங்கள் மார்வெல் சினிமா உலகத்தில் முதற்கட்டமாக வெளியிடப்பட்டன. இவை ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றன.
இதன் பிறகு மார்வெல் சினிமா உலகத்தின் இரண்டாம் கட்டம் ஆரம்பமானது இதில் ‘அயர்ன்மேன் 3’, ‘தார் 2’, ‘கேப்டன் அமெரிக்கா 2’, ‘கார்டியன்ஸ் ஆஃப் தி கேலக்ஸி’, ‘அவெஞ்சர்ஸ் 2’, ‘ஆண்ட் மேன்’ ஆகிய படங்கள் இதில் இடம்பெற்றன.
மூன்றாம் கட்டத்தின் 12 படங்கள் வெளியாகின, இதில் ப்ளாக் பேந்தர், டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் உள்ளிட்ட புதிய சூப்பர்ஹீரோக்களையும் மார்வெல் அறிமுக செய்தது. கடந்த ஆண்டு வெளியா ‘அவெஞ்சர்ஸ்: எண்ட் கேம்’ திரைப்படத்தோடு மார்வெல் சினிமா உலகத்தின் மூன்றாக கட்டம் முடிவடைந்தது.
இந்த சூழலில் மார்வெல் நிறுவனம் நான்காம் கட்ட படங்களுக்கான வேலையை தொடங்கியது. இதில் ‘ப்ளாக் விடோ’, ‘டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் 2’, ‘தோர் 4’, ஆகிய படங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டது. இதோடு ‘தி எடெர்னல்ஸ்’ என்ற புதிய பட வேலையும் தொடங்கி நடைபெற்று வந்தது.
இதில் ‘ப்ளாக் விடோ’, ‘தி எடெர்னல்ஸ்’ ஆகிய படங்கள் இந்த ஆண்டு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் உலகமெங்கும் ஏற்பட்ட கரோனா அச்சுறுத்தலால் திரையரங்குகள் மூடப்பட்டு இப்படங்களின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது.
தற்போது கரோனா தொற்று பெரும்பாலான நாடுகளில் குறையாத நிலையில் இப்படங்களின் வெளியீட்டை மீண்டும் அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைத்துள்ளது மார்வெல் நிறுவனம். இதனால் 2009க்கு பிறகு முதல்முறையாக இந்த ஆண்டில் மார்வெல் படம் வெளியாகவில்லை. இது மார்வெல் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
எனினும், ரசிகர்களுக்கு சிறிய ஆறுதலாக ‘வாண்டாவிஷன்’ என்னும் தொடரை ஓடிடியில் இந்த ஆண்டு வெளியிட மார்வெல் நிறுவனம் தீர்மானித்துள்ளதாக தெரிகிறது. இந்த வார தொடக்கத்தில் வெளியான இந்த தொடரின் டீஸர் இணையத்தில் பெரும் வரவேபை பெற்றது.
இந்த ஆண்டு நவம்பர் மாதம் வெளியாகவிருந்த ‘ப்ளாக் விடோ’ அடுத்த ஆண்டு மே மாதமும், ‘தி எடர்னல்ஸ்’ திரைப்படம் அடுத்த ஆண்டு நவம்பர் மாதமும் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago