படப்பிடிப்புக்குச் செல்ல வீட்டின் கேட்டை உடைத்த ட்வைன் ராக் ஜான்சன்

By ஐஏஎன்எஸ்

படப்பிடிப்புக்குக் கிளம்பும்போது தனது வீட்டின் வாயிற்கதவில் பிரச்சினை ஏற்பட்டு திறக்காததால் அதை உடைத்துவிட்டுச் சென்றுள்ளார் நடிகர் ட்வைன் ஜான்சன்.

ரெஸ்ட்லிங் ஆட்டங்களில் ராக் என்ற பெயரில் பிரபலமாகி தற்போது ஹாலிவுட்டில் முன்னணி ஆக்‌ஷன் ஹீரோக்களில் ஒருவராக இருப்பவர் ட்வைன் ஜான்சன். 'ஜுமான்ஜி', 'ராம்பேஜ்', 'ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ்' உள்ளிட்ட எண்ணற்ற சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார்.

தற்போது 'ரெட் நோட்டீஸ்' என்கிற திரைப்படத்தில் ஜான்சன் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் இவர் இணை தயாரிப்பாளராகவும் செயல்படுகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்புக்குத் தயாராகும் போதுதான் மேற்குறிப்பிட்டுள்ள சம்பவம் நடந்துள்ளது.

இதுகுறித்து ட்வைன் ஜான்சனே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

"எனக்கு நேரம் சரியாக இல்லை. ஆனாலும் வேலைக்குச் சென்றுதான் ஆக வேண்டும். தீவிரப் புயலின் காரணமாக மின்சார சேவை தடைப்பட்டது. இதனால் என் வீட்டின் முன் வாயிற்கதவு திறக்கவில்லை. ஹைட்ராலிக் அமைப்பை ரத்து செய்து கேட்டைத் திறக்க முயன்றேன். வழக்கமாக மின்சாரம் இல்லையென்றால் இந்த முறை வேலை செய்யும். ஆனால், இன்று வேலை செய்யவில்லை.

தொலைபேசியில் சிலரைத் தொடர்புகொண்டு இதைச் சரி செய்யும் தொழில்நுட்ப வல்லுநர் எவ்வளவு சீக்கிரம் வர முடியும் என்று கேட்டேன். 45 நிமிடங்கள் ஆகும் என்றார்கள். ஆனால், என்னிடம் அவ்வளவு நேரம் இல்லை.

அதே நேரத்தில் படக்குழுவைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான நபர்கள் நான் பணிக்கு வந்தால் அந்த நாள் பணியைத் தொடங்கலாம் என்று காத்திருக்கின்றனர் என்பது எனக்குத் தெரியும். எனவே அந்த நேரத்தில் என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்தேன்.

அந்த கேட்டைப் பிடித்துத் தள்ளி, இழுத்து, உடைத்து மொத்தமாக நானே எடுத்தேன். செங்கல் சுவரிலிருந்து அதை மொத்தமாகப் பெயர்த்து எடுத்தேன். ஸ்டீல் ஹைட்ராலிக் தந்திகளைத் துண்டித்து புல்வெளியில் வீசினேன்.

அடுத்த ஒரு மணி நேரத்தில் எனது பாதுகாப்புக் குழு, தொழில்நுட்ப வல்லுநரையும், வெல்டிங் செய்பவர்களையும் அழைத்து வந்தனர். ஆனால், அந்த கேட்டை நான் எப்படி மொத்தமாகப் பெயர்த்தெடுக்க முடிந்தது என்பதைப் பார்த்து அவர்கள் நம்ப முடியாமல், பயத்தில் இருந்தார்கள்.

எனக்கு நேரம் சரியில்லைதான். ஆனால் நான் வேலைக்குச் செல்ல வேண்டியிருந்தது. மேலும், நான் ப்ளாக் ஆடமாக நடிக்கத் தயாராக இருக்கிறேன்".

இவ்வாறு ட்வைன் ஜான்சன் தெரிவித்துள்ளார்.

ஜான்சனின் இந்தப் பதிவுடன், உடைந்த கேட்டின் புகைப்படமும் பதிவேற்றப்பட்டுள்ளது. அடுத்ததாக ப்ளாக் ஆடம் என்கிற டிசி காமிக்ஸ் சூப்பர் ஹீரோ கதாபாத்திரத்தில் ஜான்சன் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்