படப்பிடிப்பின்போது விபத்து; நீருக்கடியில் 45 வினாடிகள் போராடிய ஜாக்கி சான்: காப்பாற்றிய படக்குழுவினர்

By செய்திப்பிரிவு

‘வேன்கார்ட்’ படத்தின் படப்பிடிப்பின்போது ஏற்பட்ட ஒரு விபத்தில் நீரில் மூழ்கிய ஜாக்கி சானைப் படக்குழுவினர் மீட்டனர்.

ஜாக்கி சான் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘வேன்கார்ட்’. இப்படத்தை ஸ்டான்லி டாங் என்பவர் இயக்கி வருகிறார். கரோனாவால் பாதியில் நிறுத்தப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்புப் பணிகள் தற்போது மீண்டும் சீனாவில் தொடங்கி நடைபெற்று வருகின்றன.

படத்தில் ஜாக்கி சான் மற்றும் நடிகை மியா முகி இருவரும் தண்ணீரில் வேகமாகப் பயணம் செய்ய உதவும் ‘ஜெட்-ஸ்கி’ வாகனத்தில் பயணிப்பது போல காட்சி இடம்பெறுகிறது. இதற்கான படப்பிடிப்புப் பணிகள் இன்று நடைபெற்றன. அப்போது எதிர்பாராத விதமாக ஜாக்கி சான் மற்றும் மியா முகி சென்ற ‘ஜெட்-ஸ்கி’ ஒரு சிறிய பாறையில் மோதி விபத்துக்குள்ளானது.

இதனால் ஜாக்கி சான் மற்றும் மியா முகி இருவரும் தண்ணீரில் மூழ்கினர். விழுந்த சில நொடிகளிலேயே மியா முகி நீரிலிருந்து வெளியே வந்தார். ஆனால், ஜாக்கி சான் வெளியே வரவில்லை. இதனால் பதறிப்போன படக்குழுவினர் உடனடியாகத் தண்ணீரில் இறங்கி அவரைத் தேடினர். பாறையின் அடியில் சிக்கிக்கொண்ட ஜாக்கி சானால் வெளியே வரமுடியவில்லை. 45 வினாடிகள் தண்ணீருக்குள் தத்தளித்த ஜாக்கி சானைப் படக்குழுவினர் மீட்டனர்.

இந்தக் காட்சிகள் சீனத் தொலைகாட்சி, மற்றும் சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகியுள்ளன. பொதுவாக தான் நடிக்கும் திரைப்படங்களில் இடம்பெறும் சாகசக் காட்சிகளில் டூப் இல்லாமல் நடிப்பவர் ஜாக்கி சான். இந்த நிலையில் ஜாக்கி சானுக்கு ஏற்பட்ட இந்த விபத்துக்கு அவரது ரசிகர்கள் பலரும் கவலை தெரிவித்து வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

சினிமா

5 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்