ப்ரூஸ் வில்லிஸ், மேகன் ஃபாக்ஸ் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘மிட்நைட் இன் தி ஸ்விட்ச்க்ராஸ்’. இப்படத்தை ராண்டால் எம்மெட் இயக்கி வருகிறார். அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தை உலுக்கிய ‘ட்ரக் ஸ்டாப் கில்லர்’ என்ற ஒரு சீரியல் கொலைகாரனைப் பற்றிய உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இப்படம் உருவாகி வருகிறது.
கரோனா அச்சுறுத்தலால் கடந்த மார்ச் மாதம் நிறுத்தப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்புப் பணிகள் மீண்டும் ஜூலை மாதம் தொடங்கி நடைபெற்று வந்தது.
இந்நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் போர்டோ ரிகோ பகுதியில் படப்பிடிப்புப் பணிகள் நடைபெற்று வந்த நிலையில், படக்குழுவினர் இருவருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் இப்படத்தின் படப்பிடிப்பு மீண்டும் நிறுத்தப்பட்டுள்ளது.
அவர்கள் இருவருக்கும் அறிகுறிகள் எதுவும் இல்லையென்றும் அவர்கள் உடனடியாக தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாகவும் படக்குழுவினர் தரப்பில் கூறப்படுகிறது.
» வல்லமை பொருந்திய எதிரி: ஜேம்ஸ் பாண்ட் படத்தின் வில்லன் கதாபாத்திரம் குறித்து ரமி மாலேக்
» பாலிவுட்டுக்கு எதிரான அவதூறுகளை நிறுத்த வேண்டும்: மாநிலங்களவையில் ஜெயா பச்சன் பேச்சு
படப்பிடிப்புப் பணிகளை சில வாரங்களுக்குப் பிறகு மீண்டும் சாண்டா பார்பரா பகுதியில் இன்னும் அதிக பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் தொடங்க முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
முக்கிய செய்திகள்
சினிமா
59 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
5 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago