2011 ஆம் ஆண்டு வெளியான ‘கேப்டன் அமெரிக்கா: தி ஃபர்ஸ்ட் அவெஞ்சர்’ படத்தின் மூலம் மார்வெல் சினிமா உலகில் அறிமுகமானவர் க்றிஸ் எவான்ஸ். அதற்குப் பல ஆண்டுகளுக்கு முன்பே ‘ஃபெண்டாஸ்டிக் 4’ படத்தில் டார்ச் கதாபாத்திரத்தில் சூப்பர் ஹீரோவாக நடித்திருந்தாலும் கேப்டன் அமெரிக்காதான் க்றிஸ் எவான்ஸைப் பட்டிதொட்டியெங்கும் கொண்டு சேர்த்தது.
கடந்த ஆண்டு வெளியாகி பெரும் வெற்றியைப் பெற்ற ‘அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்’ படத்தோடு மார்வெல் படங்களிலிருந்து தான் ஓய்வு பெறுவதாக அறிவித்தார் க்றிஸ் எவான்ஸ். அதன்பிறகு கடந்த ஆண்டு ‘நைவ்ஸ் அவுட்’ என்ற படத்திலும் நடித்திருந்தார்.
இந்நிலையில் நேற்று ட்விட்டர் சமூக வலைதளத்தில் க்றிஸ் எவான்ஸ் பெயர் திடீரென ட்ரெண்ட் ஆகிக் கொண்டிருந்தது. அதற்கு முந்தைய தினம் கிற்ஸ் எவான்ஸ் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது நண்பர்களோடு நடத்திய ஒரு நேரலையின்போது அவருடைய செல்போன் கேலரியில் ஒரு ஆபாசப் புகைப்படம் இருந்துள்ளது. இதைக் கண்டுகொண்ட ரசிகர்கள் அதை சமூக வலைதளங்களில் பரப்பியுள்ளனர். சிறிது நேரத்தில் அந்த நேரலை வீடியோவை க்றிஸ் எவான்ஸ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலிருந்து நீக்கினார். ஆனால் சில மணி நேரங்களிலேயே அது குறித்த் பதிவுகள் சமூக வலைதளங்களை ஆக்கிரமித்தன.
நெட்டிசன்கள் பலரும் க்றிஸ் எவான்ஸைக் கிண்டலடித்தும், பலர் அவரை ஆதரித்தும் பதிவிட்டதால் அவரது பெயர் உலக அளவில் ட்ரெண்டிங்கில் இடம்பெற்றது.
இந்தச் சூழலில் மார்வெல் படங்களில் க்றிஸ் எவான்ஸ் உடன் இணைந்து ‘ஹல்க்’ கதாபாத்திரத்தில் நடித்த மார்க் ருஃப்பலோ க்றிஸ் எவான்ஸுக்கு தன்னுடைய ஆதரவைத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது:
''நண்பா...! அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எந்தச் சங்கடமும் இன்றி தனது அலுவலகத்தில் அமர்ந்திருக்கும்போது, நீங்கள் சங்கடப்படுவதற்கு இதில் எதுவுமே இல்லை''.
இவ்வாறு மார்க் ருஃப்பலோ கூறியுள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago