பிரபல ஹாலிவுட் நடிகர் டுவேன் ஜான்ஸன் தனக்கும் தன் குடும்பத்தினருக்கும் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
‘தி ராக்’ என்று ரசிகர்களால் அழைக்கப்படும் ஜான்ஸன் இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நேற்று வெளியிட்டுள்ள காணொளியில் கூறியுள்ளதாவது:
நான், என் மனைவி லாரென், என் இரு மகள்கள் அனைவருக்கும் கடந்த 3 வாரங்களுக்கு முன்பாக கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரு குடும்பமாக எங்களுக்கு இது ஒரு மிகப்பெரிய சவலான மற்றும் கடினமான விஷயம். தனிப்பட்ட முறையில் எனக்கு அதிக சவாலாக இருக்கிறது. கடந்த காலங்களிலும் இது போன்ற தனித்துவமான சவால்கள் எனக்கு ஏற்பட்டுள்ளன.
ஆனால் மோசமான காயங்களிலிருந்து மீண்டு வருவதை விட அல்லது வெளியேற்றப்படுவதை விட அல்லது உடைந்து போவதை விட கரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்வது வித்தியாசமானது. இதை ஏன் வித்தியாசமானது என்று குறிப்பிடுகிறேன் என்றால் என் குடும்பத்தையும் என் குழந்தைகளையும் பாதுகாப்பதே எப்போதும் என்னுடைய முதல் முன்னுரிமையாக இருக்கிறேன்.
அதிர்ஷ்டவசமாக என் குழந்தைகளுக்கு லேசான அறிகுறிகளே உள்ளன. எனக்கும் என் மனைவிக்கும் முதலில் தீவிர அறிகுறிகள் இருந்தாலும் நாங்களும் இப்போது நலமுடன் இருக்கிறோம்.
நாங்கள் கரோனாவை எங்கள் நெருங்கிய குடும்ப நண்பர்களிடமிருந்து பெற்றுக் கொண்டோம். அவர்கள் எங்கள் அன்புக்கும் நம்பிக்கைக்கும் பாத்திரமானவர்கள்.
எங்கள் குடும்பத்தினர் கரோனாவிலிருந்து மீள்வது இதே போன்ற போராட்டத்தை சந்திக்கும் மற்றவர்களுக்கும் ஒரு உந்துசக்தியாக இருக்கும்.
உங்கள் அனைவரது வாழ்த்துக்களையும் நாங்கள் எதிர்பார்க்கிறோம். வலிமையாகவும் ஆரோக்கியமாகவும் கரோனா தொற்றிலிருந்து மீள முடியாது என்பதை நாங்கள் அறிவோம். என்னுடைய நண்பர்களில் சிலர் தங்கள் பெற்றோர்களை இந்த வைரஸுக்கு இழந்திருக்கின்றனர்.
எனவே கவனமுடன் இருங்கள். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்திக் கொள்ளுங்கள். முகக்கவசம் அணிந்துகொண்டு உங்கள் குடும்பத்தையும் காப்பாற்றுங்கள்.
இவ்வாறு ஜான்ஸன் கூறியுள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
20 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
2 days ago
சினிமா
2 days ago
சினிமா
2 days ago
சினிமா
2 days ago
சினிமா
2 days ago
சினிமா
2 days ago