‘கேப்டன் மார்வெல் 2’ படத்தை இயக்க புதிய பெண் இயக்குநர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
மார்வெல் சினிமாடிக் உலகத்தின் 23-வது படமாக கடந்த ஆண்டு வெளியான படம் ‘கேப்டன் மார்வெல்’. ப்ரீ லார்ஸன் நடித்த இப்படத்தை ஆன்னா போடென், ரயான் ஃப்ளெக் ஆகியோர் இயக்கியிருந்தனர். மார்வெல் தயாரிப்பில் உருவான முதல் பெண் சூப்பர் ஹீரோ படம் இது.
பெண்களின் சூப்பர் ஹீரோ படங்கள் அதிக வசூலை ஈட்டாது என்ற மாயையை உடைத்து உலகமெங்கும் 1 பில்லியன் அமெரிக்க டாலர்களை வசூலித்தது ‘கேப்டன் மார்வெல்’.
இந்நிலையில் இப்படத்தின் அடுத்த பாகத்துக்கான வேலைகளைத் தொடங்கியுள்ளது மார்வெல் நிறுவனம். இப்படத்தை இயக்கும் பொறுப்பு ஆன்னா போடெனிடமிருந்து தற்போது நியா டாகோஸ்டாவிடம் சென்றுள்ளது.
» ட்விட்டர் தளத்தில் இணைந்த மிஷ்கின்
» 'பார்ட்டி' வெளியாகாமல் சிக்கலில் இருப்பது மிகப்பெரிய ஏமாற்றம்: வெங்கட் பிரபு
நியா தற்போது ‘கேண்டிமேன்’ என்னும் ஹாரர் படம் ஒன்றை இயக்கி வருகிறார். இப்படத்தின் வேலைகள் முடிந்ததும் ‘கேப்டன் மார்வெல்’ படத்தின் பணிகளைத் தொடங்குவார் என்று கூறப்படுகிறது.
நியா டாகோஸ்டா மார்வெல் சினிமாடிக் படத்தை இயக்கும் நான்காவது பெண் ஆவார். இதற்கு முன் ‘கேப்டன் மார்வெல்’, ‘ப்ளாக் விடோ’, ‘தி எடர்னல்ஸ்’ ஆகிய படங்களை பெண் இயக்குநர்கள் இயக்கியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் நியா மார்வெல் படத்தை இயக்கவுள்ள முதல் கறுப்பினப் பெண்மணியும் ஆவார்.
‘கேப்டன் மார்வெல் 2’ 2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முக்கிய செய்திகள்
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago