பிரபல கால்பந்தாட்ட வீரர் டேவிட் பெக்காமின் வாழ்க்கை திரைப்படமாக உருவாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிரபல கூடைப்பந்து வீரர் மைக்கேல் ஜோர்டானின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு உருவான திரைப்படம் ’தி லாஸ்ட் டான்ஸ்’. நெட்ஃப்ளிக்ஸில் வெளியான இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.
இப்படத்தினால் ஈர்க்கப்பட்ட கால்பந்தாட்ட வீரர் டேவிட் பெக்காம் இதே போல தன் வாழ்க்கையையும் திரைப்படமாக உருவாக்க திட்டமிட்டுள்ளார். இதற்கான முதற்கட்ட பணிகளை டேவிட் பெக்காமின் ஸ்டூடியோ 99 என்ற தயாரிப்பு நிறுவனம் தொடங்கியுள்ளது.
இப்படத்தை வெளியிட அமேசான் ப்ரைம், நெட்ஃப்ளிக்ஸ் உள்ளிட்ட ஓடிடி தளங்களுடன் பெக்காம் பேச்சுவார்த்தை நடத்திவருகிறார்.
» 'சாஹோ' இயக்குநருக்கு திருமணம்: பிரபலங்கள் வாழ்த்து
» மீண்டும் ஒரு திருப்பம்: புதிய தயாரிப்பாளர் சங்கம் தொடங்க உறுதியாக உள்ளதாக பாரதிராஜா கடிதம்
இப்படம் டேவிட் பெக்காமின் கால்பந்தாட்ட வாழ்க்கை, குடும்ப வாழ்க்கை, மியாமியில் உருவாக்கப்பட்ட அவரது புதிய அணி ஆகியவற்றை பற்றி பேசவுள்ளதாக கூறப்படுகிறது.
இப்படத்தில் நடிக்கவுள்ள நடிகர்கள், இயக்குநர் மற்ற தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய தகவல்கள் எதுவும் இன்னும் அறிவிக்கப்படவில்லை.
முக்கிய செய்திகள்
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago