2017-ம் ஆண்டு டிசி காமிக்ஸின் 'ஜஸ்டிஸ் லீக்' திரைப்படம் வெளியானது. ஏற்கனவே டிசி சினிமா உலகில் 'மேன் ஆஃப் ஸ்டீல்', 'பேட்மேன் வெர்சஸ் சூப்பர்மேன்' உள்ளிட்ட படங்களை இயக்கிய ஸேக் ஸ்னைடர், 'ஜஸ்டிஸ் லீக்' திரைப்படத்தை இயக்கியிருந்தார். ஆனால், படத்தின் இறுதிக்கட்ட வேலைகளின்போது ஸ்னைடரின் மகள் தற்கொலை செய்து கொண்டதால் ஸ்னைடரால் படத்தின் வேலைகளைத் தொடர்ந்து கவனிக்க முடியாமல் போனது.
படத்தில் சில கூடுதல் காட்சிகளைச் சேர்க்க, 'அவெஞ்சர்ஸ்' முதல் இரண்டு பாகங்களை இயக்கிய ஜாஸ் வீடன் உதவியை ஸ்னைடர் ஏற்கெனவே நாடியிருந்ததால், வீடனை வைத்துப் படத்தை முடிக்க வைத்தது வார்னர் பிரதர்ஸ் நிறுவனம். தொடர்ந்து படத்தின் சில பகுதிகள் மீண்டும் படப்பிடிப்பு செய்யப்பட்டன. படம் வெளியாகி கடுமையான விமர்சனங்களைச் சந்தித்தது.
ஆனால், வெளியான படம், அசல் இயக்குநர் ஸாக் ஸ்னைடரின் பார்வையிலிருந்து விலகி விட்டதாகவும், ஸ்னைடர் எடுத்து முடித்த பதிப்பை வார்னர் பிரதர்ஸ் வெளியிட வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்தன. இதனைக் கருத்தில் கொண்டு ஸ்னைடர் எடுத்த 'ஜஸ்டிக் லீக்' படம் ஓடிடியில் வெளியாகும் என்று வார்னர் ப்ரதர்ஸ் நிறுவனம் அறிவித்திருந்தது.
இந்நிலையில் பழைய ‘ஜஸ்டிஸ் லீக்’ படத்தின் எந்தவொரு காட்சியும் புதிய ‘ஜஸ்டிஸ் லீக்’ படத்தில் இடம்பெறாது என்று ஸாக் ஸ்னைடர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஸ்னைடர் கூறியுள்ளதாவது:
''நான் விலகுவதற்கு முன்போ அல்லது பின்போ எடுக்கப்பட்ட எந்தவொரு காட்சியும் இப்படத்தில் பயன்படுத்தப்படாது. நான் எடுக்காத ஒரு காட்சியை என் படத்தில் பயன்படுத்துவதற்குள் நான் அதை அழித்துவிடுவேன். அதை நெருப்பில் பொசுக்கிவிடுவேன். இதுதான் உண்மை.
திரையரங்கில் வெளியான அந்தப் படத்தின் ஒரு காட்சியை என் படம் உங்களுக்கு நினைவூட்டினாலும் இதை நான் கைவிட்டுவிடுவேன்''.
இவ்வாறு ஸ்னைடர் கூறியுள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago