உலகம் முழுவதும் பெரும் வரவேற்பைப் பெற்ற தொடர் ‘கேம் ஆஃப் த்ரோன்ஸ்’. 8 சீசன்களைக் கொண்ட இத்தொடர் கடந்த ஆண்டு நிறைவுபெற்றது. இத்தொடரை எச்பிஓ நிறுவனம் தயாரித்திருந்தது.
ஜார்ஜ் ஆர்.ஆர். மார்ட்டின் என்பவர் எழுதிய ‘எ சாங் ஆஃப் ஐஸ் அண்ட் ஃபயர்’ என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட இத்தொடர் சிறந்த தொடரருக்கான எம்மி விருது உள்ளிட்ட ஏராளமான விருதுகளைக் குவித்துள்ளது.
7 ராஜ்ஜியங்களுக்கு இடையே நடக்கும் அதிகாரப் போரே இந்தத் தொடரின் அடித்தளம்.
இந்நிலையில் இத்தொடருக்கு முந்தைய கதையை வெப் சீரிஸாக எடுக்கவுள்ளதாக எச்பிஓ நிறுவனம் அறிவித்துள்ளது. இந்தக் கதை ‘கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ நிகழ்வுகள் நடக்கும் காலத்துக்கு 300 ஆண்டுகளுக்கு முந்தைய காலகட்டத்தில் நடப்பது போன்ற கதைக்களத்தைக் கொண்டது.
» 'ஜானி' ரீமேக்கில் நடிக்க விரும்பிய அஜித்
» ஹரி இயக்கத்தில் அருண் விஜய்: பேச்சுவார்த்தையில் புதிய கூட்டணி
இதை 10 எபிசோட்களாக எடுக்க எச்பிஓ நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இத்தொடரை 'கேம் ஆஃப் த்ரோன்ஸ்' தொடரில் சில எபிசோட்களை இயக்கிய ரயான் கோன்டால், மிக்யுல் ஸ்போச்னிக், உள்ளிட்டோர் இயக்கவுள்ளனர். இத்தொடருக்கு ‘ஹவுஸ் ஆஃப் தி ட்ராகன்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.
இத்தொடருக்கான நடிகர், நடிகையர் தேர்வை எச்பிஓ நிறுவனம் தொடங்கியுள்ளது. 2022 ஆம் ஆண்டு இத்தொடர் இணையத்தில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.
முக்கிய செய்திகள்
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago