பெண்ணை மையமாக கொண்டு உருவாகும் ‘பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன்’ - நாயகியாக மார்காட் ராப்பி ஒப்பந்தம்

By பிடிஐ

டிஸ்னி தயாரிப்பில் ஜானி டெப் நடித்த படம் ‘பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன்’. 17ஆம் நூற்றாண்டு காலகட்டத்தில் நடப்பது போல அமைக்கப்பட்ட இப்படத்தின் முதல் மூன்று பாகங்களை கோர் வெர்பின்ஸ்கி இயக்கினார். இப்படங்கள் உலகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றவை. இப்படம் கரீபியன் தீவுகளை சுற்றி வாழ்ந்த கடற்கொள்ளையர்களை பற்றிய கற்பனை ஃபேண்டஸி வகையைச் சேர்ந்தது. ஜானி டெப் நடித்த ஜாக் ஸ்பேரோ கதாபாத்திரத்துக்கு சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ரசிகர்கள் ஏராளம்.

இந்நிலையில் தற்போது இப்படம் பெண்ணை மையமாகக் கொண்டு உருவாகவுள்ளது. இதில் ஜாக் ஸ்பேரோவுக்கு இணையாக ஒரு பெண் கதாபாத்திரம் இடம்பெறவுள்ளதாக கூறப்படுகிறது. இதில் நடிப்பதற்காக மார்காட் ராப்பி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

மார்ட்டின் ஸ்கார்செஸி இயக்கிய ‘வொல்ஃப் ஆஃப் வால் ஸ்ட்ரீட்’ படத்தின் மூலம் பிரபலமானவர் மார்காட் ராப்பி. ‘சூசைட் ஸ்குவாட்’, ‘ஒன்ஸ் அபான் எ டைம் இன் ஹாலிவுட்’, ‘பேர்ட்ஸ் ஆஃப் ப்ரே’ உள்ளிட்ட பல படங்களிலும் நடித்துள்ளார்.

இப்படத்துக்கான கதையை ‘பேர்ட்ஸ் ஆஃப் ப்ரே’ படத்தின் கதாசிரியர் க்றிஸ்டினா ஹாட்ஸன் எழுதுகிறார்.

‘பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன்’ ஐந்து பாகங்களையும் தயாரித்த டிஸ்னி நிறுவனமே இப்படத்தையும் தயாரிக்கிறது.

முந்தைய படங்களின் தொடர்ச்சியாக இல்லாமல் முற்றிலும் புதிய கதாபாத்திரங்களை கொண்டு இப்படம் உருவாகவுள்ளதாக கூறப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்