1999 ஆம் ஆண்டு வக்காவ்ஸ்கி சகோதரிகள் இயக்கத்தில் வெளியான படம் ‘தி மேட்ரிக்ஸ்'. கேயானு ரீவ்ஸ் நடித்த இந்தப் படம் உலகம் முழுவதும் பெரும் வரவேற்பைப் பெற்றது.
முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து 2003 ஆம் ஆண்டு 'தி மேட்ரிக்ஸ் ரீலோடட்' என்ற படமும், அதே ஆண்டின் இறுதியில் 'தி மேட்ரிக்ஸ் ரெவல்யூஷன்ஸ்' என்ற படமும் வெளியாகி வெற்றியைக் குவித்தன. இப்படங்களை வார்னர் ப்ரதர்ஸ் நிறுவனமும் வில்லேஜ் ரோட் ஷோ நிறுவனமும் இணைந்து தயாரித்தன.
ஏறக்குறைய 17 ஆண்டுகளுக்குப் பிறகு 'தி மேட்ரிக்ஸ்' படத்தின் அடுத்த பாகம் உருவாகி வருகிறது. இதில் கேயானு ரீவ்ஸ், கேரி ஆன் மோஸ் உள்ளிட்டோர் மீண்டும் நடித்து வருகின்றனர்.
கரோனா அச்சுறுத்தல் காரணமாக இப்படத்தின் படப்பிடிப்பும் கடந்த மார்ச் மாதம் பாதியில் நிறுத்தப்பட்டது. தற்போது பல நாடுகளிலும் கரோனா தொற்றுப் பரவல் குறைந்து ஊரடங்கு தளர்த்தப்பட்டு வருவதால் பல ஹாலிவுட் படங்களின் படப்படிப்புகள் மீண்டும் தொடங்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் ‘தி மேட்ரிக்ஸ்’ படத்தின் படப்பிடிப்பும் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. ஆனால், இதுகுறித்து படக்குழுவினர் எந்தவொரு அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியிடாத நிலையில் ‘மேட்ரிக்ஸ்’ படத்தின் படப்பிடிப்பு தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் கசிந்துள்ளன. கேயானு ரீவ்ஸ் தனது காதலியுடன் படப்பிடிப்புத் தளத்தைப் பார்வையிடச் சென்றபோது இப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
படம் குறித்த எந்தத் தகவலையும் தயாரிப்பு நிறுவனங்கள் வெளியிடாமல் மௌனம் காத்து வந்த நிலையில் படப்பிடிப்பு புகைப்படங்கள் இணையத்தில் வெளியானது படக்குழுவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
‘மேட்ரிக்ஸ்’ அடுத்த பாகம் வரும் 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முக்கிய செய்திகள்
சினிமா
13 mins ago
சினிமா
2 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago