எஸ்ரா மில்லர் நடிப்பில் உருவாகவுள்ள 'தி ஃப்ளாஷ்' திரைப்படத்தில், பேட்மேன் கதாபாத்திரத்தில் நடிக்க நடிகர் மைக்கல் கீடனுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
1989 மற்றும் 1992-ம் ஆண்டு வெளியான 'பேட்மேன்' மற்றும் 'பேட்மேன் ரிட்டர்ன்ஸ்' ஆகிய திரைப்படங்களில் மைக்கல் கீடன் பேட்மேனாக நடித்திருந்தார். இரண்டு படங்களுமே மாபெரும் வெற்றி பெற்றன.
மேலும் 2014-ம் ஆண்டு வெளியான 'பேட்மேன்' திரைப்படத்தில், சூப்பர்ஹீரோ படங்களில் ஒரு காலத்தில் நடித்திருந்த நடிகர் என்ற கதாபாத்திரத்தில் கீடன் தோன்றியிருந்தார். தற்போது மீண்டும் கீடனை சூப்பர்ஹீரோ படங்களுக்குள் இழுக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
ஏற்கனவே 'ஃப்ளாஷ்' கதாபாத்திரத்தை வைத்து தொலைக்காட்சி தொடர் எடுக்கப்பட்டுள்ளது. 'ஜஸ்டிஸ் லீக்' திரைப்படத்திலும் ஃப்ளாஷ் கதாபாத்திரம் தோன்றும். அந்த கதாபாத்திரத்தை வைத்து தனியாக உருவாகும் படத்தை 'இட்' திரைப்படத்தின் இயக்குநர் ஆண்டி முஷெட்டி இயக்குவதாக வார்னர் பிரதர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
» இளையராஜா நல்ல தம்பியை தவற விட்டுவிட்டான்: இயக்குநர் பாரதிராஜா
» தமிழ் சினிமாவின் சுஷாந்த்களே, தல அஜித்தைப் பாருங்கள்: வாசுகி பாஸ்கர்
மேலும் இந்தப் படத்திலும், பேட் கேர்ள் உள்ளிட்ட டிசி காமிக்ஸை தழுவி எடுக்கப்படும் மற்ற படங்களிலும் பேட்மேனாக நடிக்க கீடனை கேட்டுள்ளதாகவும் தெரிகிறது. அடுத்த வருட ஆரம்பத்தில் 'தி ஃப்ளாஷ்' படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுவரை 'பேட்மேன்' கதாபாத்திரத்தில் பல்வேறு நடிகர்கள் நடித்துள்ளனர். க்றிஸ்டஃபர் நோலனின் 'பேட்மேன்' திரைப்பட வரிசையில் க்றிஸ்டியன் பேல், ஸாக் ஸ்னைடர் எடுத்த படங்களில் பென் ஆஃப்ளெக் ஆகியோர் பேட்மேனாக நடித்திருந்தனர். தற்போது மாட் ரீவ்ஸ் எடுத்து வரும் 'பேட்மேன்' திரைப்படத்தில் ராபர்ட் பாட்டின்ஸன் பேட்மேனாக நடித்து வருகிறார்.
முக்கிய செய்திகள்
சினிமா
7 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago