ஃபெராரி திரைப்படத்தின் நாயகனாகும் ஹ்யூ ஜாக்மேன்?

By பிடிஐ

பிரபல கார் தயாரிப்பு நிறுவனமான ஃபெராரியின் நிறுவனர் என்ஸோ பெராரியின் வாழ்க்கை ‘ஃபெராரி’ என்ற பெயரில் திரைப்படமாக உருவாகவுள்ளது. இதில் நாயகனாக நடிக்க ஹ்யூ ஜாக்மேனிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

ப்ராக் யேட்ஸ் என்பவர் எழுதிய ‘என்ஸோ ஃப்ராரி - தி மேன் அன்ட் தி மெஷின்’ என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் இப்படத்தை மைக்கேல் மேன் இயக்கவுள்ளார். இப்படத்தின் கதையை ‘இடாலியன் ஜாப்’ படத்தின் கதையை எழுதிய ட்ராய் கென்னடி மார்ட்டின் எழுதுகிறார். இப்படத்தை எஸ்டிஎக்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்துக்கான ஒளிபரப்பு உரிமையை அமேசான் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

1957ஆம் ஆண்டு காலகட்டத்தில் நடக்கும் இக்கதை ஃபெராரியின் பொது மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை, அவரது சரிவு, அவரது மனைவி லாராவுடனான பிணைப்பு, அவர்களது மகனின் மரணம், உள்ளிட்டவற்றை அலசும் வகையில் படமாக்கப்படவுள்ளது.

இதுகுறித்து எஸ்டிஎக்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

1957ஆம் ஆண்டு கோடைகாலத்தில் ஃபெராரியின் வாழ்க்கையில் ஏற்பட்ட துயரங்களை பற்றி இப்படம் பேசுகிறது. ஒரு சிறந்த திரைப்பட அனுபவத்துக்காக அற்புதமான கதாபாத்திரங்களை பற்றியும் 50களிலன் ஆபத்தான ரேஸ் உலகை பற்றியும் மேன் பேசவுள்ளார்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு இதே பாணியில் போர்ட் நிறுவனத்துக்கும் ஃபெராரி நிறுவனத்துக்கும் இடையே நடந்த பனிப்போரை பற்றி பேசுகிற ‘ஃபோர்ட் வி ஃபெராரி’ திரைப்படம் வெளியாகி வெற்றி பெற்றது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

8 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்