பிராட் பிட்டைப் பிரிந்ததற்கான காரணம்: மனம் திறந்த ஏஞ்சலினா ஜோலி

By ஐஏஎன்எஸ்

ஹாலிவுட்டின் பிரபல நடிகையாக அறியப்படுபவர் ஏஞ்சலினா ஜோலி. உலகிலேயே அதிக சம்பளம் பெறும் பிரபலங்களில் ஒருவரான இவர் சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருதையும் பெற்றுள்ளார்.

பிரபல ஹாலிவுட் நடிகரும் தனது 12 ஆண்டுகாலக் காதலருமான பிராட் பிட்டைக் கடந்த 2014 ஆம் ஆண்டு ஏஞ்சலினா ஜோலி திருமணம் செய்தார். இவர்களுக்கு ஆறு குழந்தைகள் உள்ளனர். அதில் மூன்று குழந்தைகள் தத்தெடுக்கப்பட்டவர்கள். இரண்டு ஆண்டு திருமண வாழ்க்கைக்குப் பிறகு ஏஞ்சலினா ஜோலி பிராட் பிட் இருவரும் 2016 ஆம் ஆண்டு பிரிந்தனர். கடந்த 2019 ஆம் ஆண்டு இருவருக்கும் சட்டபூர்வமாக விவாகரத்து கிடைத்தது.

இந்நிலையில்தான் பிராட் பிட்டைப் பிரிந்ததற்கான காரணம் குறித்து ஏஞ்சலினா மனம் திறந்துள்ளார். இதுகுறித்து தனியார் ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியுள்ளதாவது:

''நான் என் குடும்பத்தின் நலனுக்காக பிராட் பிட்டைப் பிரிந்தேன். அதுதான் சரியான முடிவு. என் குடும்பத்தினர் மீதான அக்கறையில் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறேன். என்னுடைய மௌனத்தை சிலர் அவர்களது நன்மைக்குப் பயன்படுத்திக் கொள்கின்றனர்.

என் குழந்தைகள் தங்களைப் பற்றி ஊடகங்களில் வரும் பொய்யான தகவல்களைப் பார்க்கும்போது, அவர்களிடம் நான் உங்களைப் பற்றிய உண்மை உங்களுக்குத் தெரியும் என்று உணர்த்துகிறேன். உண்மையில் அவர்கள் ஆறு பேரும் மிகவும் துணிச்சலானவர்கள், உறுதியானவர்கள்''.

இவ்வாறு ஏஞ்சலினா கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்