பிரெஞ்சு திரைப்பட விழா இணையத்தில் இலவசம்!- உங்கள் குழந்தைகளுக்குக் கொண்டாட்டம்

By ஆர்.சி.ஜெயந்தன்

இன்ஸ்டிட்யூட் ஃபிரான்சாய்ஸ் (Institut Français) பிரெஞ்சு நாட்டின் புகழ்பெற்ற கலை மற்றும் கலாச்சாரப் பரிமாற்ற நிறுவனம். உலகெங்கிலும் உள்ள பிரெஞ்சு, பிராங்கோஃபோன் கலாச்சாரங்களை மேம்படுத்துவதற்காக 1907 ஆம் ஆண்டு அந்நாட்டின் வெளியுறவு அமைச்சகத்தால் தொடங்கப்பட்ட மிகப் பழமையான கலாச்சாரத் தூதரக அமைப்பான இது, 2011-ல் பிரெஞ்சு நாட்டின் கலாச்சார அமைச்சகத்தின் கீழ் இயங்கத் தொடங்கியது.

பிரெஞ்சு நாட்டின் முக்கிய நகரங்களில் 150-க்கும் மேற்பட்ட கிளை மையங்களையும் வெளிநாடுகளில் சுமார் 1000 கிளை அலுவலகங்களையும் கொண்ட உலகின் மிகப்பெரிய கலாச்சாரத் தூதரக வலைப்பின்னலைக் கொண்டிருக்கும் ஒரே அமைப்பு. இத்தகைய கிளை கலாச்சாரத் தூதரகங்கள் மூலம் பிரெஞ்சு மொழியைக் கற்றுத் தருவதையும் பிரெஞ்சு தேசத்தின் முக்கியக் கலைகளைப் பயிற்றுவைத்து, கலாச்சாரப் பரிமாற்றம் செய்து கொள்வதையும் கடந்த நூறு ஆண்டுகளைக் கடந்து வெற்றிகரமாகச் செய்து வருகிறது. தமிழகத்தில் சென்னையின் நுங்கம்பாக்கத்தில் உள்ள கல்லூரிச் சாலையில் ‘அலையன்ஸ் பிரான்சைஸ்’ என்ற பெயரில் இன்ஸ்டிட்யூட் ஃபிரான்சாய்ஸ் செயல்பட்டு வருகிறது.

இந்த அமைப்பு குறிப்பாக, நாடகம், நடனம் உள்ளிட்ட நிகழ்த்துக் கலைகள், திரைப்படம், ஆவணப்படம், ஒளிப்படக் கலை உள்ளிட்ட காட்சி கலைகள், கட்டிடக்கலை, புகழ்பெற்ற பிரெஞ்சு புத்தகங்களை சர்வதேச சமூகத்திடம் கொண்டு சேர்க்கும் கிளை நூலகம், தொழில்நுட்ப அறிவைப் பகிர்ந்துகொள்ளுதல் எனப் பல வேலைகளைச் செய்து வருகிறது. ஆனால், பெரும்பாலானவர்கள் இன்ஸ்டிட்யூட் ஃபிரான்சாய்ஸ் நிறுவனத்தை படவிழாக்கள் நடத்தும் ஒரு அமைப்பாகவும் பிரெஞ்சு மொழியைக் கற்றுக்கொள்ளும் ஒரு இடமாக மட்டுமே பார்த்து வருகின்றனர்.

தற்போது கரோனா ஊரடங்கு காரணமாக ஆண்டுதோறும் நடத்தப்பட்டுவரும் இன்ஸ்டிட்யூட் ஃபிரான்சாய்ஸின் ‘ஐஎஃசினிமா’ என்ற என்ற புகழ்பெற்ற திரைப்பட விழாவை குழந்தைகள் மற்றும் பதின்ம வயதினருக்கான திரைப்படவிழாவாக இணையத்தில் இலவசமாக நடத்தி வருகிறது. பெரியவர்களுக்கான படங்களும் அவற்றில் இடம்பெற்றிருந்தாலும் சிறுவர்களின் உலகை ஆழமாகவும் நுட்பமாகவும் விவரித்துக் காட்டும் முழுநீளத் திரைப்படங்கள், அனிமேசன் படங்கள், அனிமேஷன் குறும்படங்கள் இடம்பெற்றுள்ளன. கீழேயுள்ள இணைப்பில் சென்று உங்கள் மேஜைக் கணனி வழியாக ‘ஐஎஃசினிமா’ சர்வதேசத் திரைப்பட விழா திரைப்படங்களை ஜூலை 13-ம் தேதிவரை சப்-டைட்டிலுடன் கண்டுகளிக்கலாம். இந்த இலவசத் திரைப்பட விழா உங்கள் குழந்தைகளுக்குக் கொண்டாட்டமாக அமையலாம்.

shorturl.at/dlp27

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

12 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்