விவாகரத்துதான் எனக்குக் கிடைத்த மிகப்பெரிய தோல்வி: வில் ஸ்மித்

By ஐஏஎன்எஸ்

தனது முன்னாள் மனைவி ஷெரீ ஃப்ளெட்சருடனான விவாகரத்துதான் தனது வாழ்க்கையில் கிடைத்த மிகப்பெரிய தோல்வி என்று நடிகர் வில்ஸ்மித் கூறியுள்ளார்.

சமீபத்தில் தந்தையர் தினத்தன்று நடந்த ஃபேஸ்புக் நிகழ்ச்சி ஒன்றில் பேசியிருந்த வில் ஸ்மித், தனது முதல் திருமணம், தனது மகன் ட்ரேவுக்கு இரண்டு வயதானபோது பெற்ற விவாகரத்து குறித்து வெளிப்படையாகப் பேசியுள்ளார்.

"நான் ஒரு சுவாரசியமான சிந்தனை பற்றி பேச வேண்டும் என்று நினைக்கிறேன். அது ட்ரே மற்றும் உங்களுடைய விவாகரத்தைப் பற்றியது. அது என்னவென்றால் ஒரு ஆள் சிறந்த கணவராக இல்லாமல் போகலாம், ஆனால் அதற்காக அவரால் சிறந்த அப்பாவாக இருக்க முடியாது என்று அர்த்தமல்ல. இல்லையா" என்று வில் ஸ்மித்தின் மனைவி பிங்கெட் ஸ்மித் கேட்டார்.

இதற்கு பதிலளித்த வில் ஸ்மித், "ஷெரீ மற்றும் ட்ரேவைப் பொருத்தவரை அது மிகவும் கடினமான காலகட்டமாக இருந்தது. நான் வளர்ந்த பிறகு என் வாழ்க்கையில் நடந்த மிக மோசமான விஷயம் அந்த விவாகரத்துதான். அதுதான் எனக்குக் கிடைத்த மிகப்பெரிய தோல்வி. வளர்ந்த பிறகு நான் நிறைய காயப்பட்டிருக்கிறேன். ஆனால் எனது இரண்டு வயது மகனின் தாயுடனான விவாகரத்து போல எதுவும் மோசமாக இருக்காது என்று நினைக்கிறேன்" என்று கூறினார்.

ஸ்மித் மற்றும் ஃப்ளெட்சர், 1992-ம் ஆண்டு மணந்து 1995-ம் ஆண்டு விவாகரத்து பெற்றனர். 1997-ம் ஆண்டு, பிங்கெட் ஸ்மித்தை வில் ஸ்மித் மணந்தார். இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள். மகன் ஜேடனுக்கு இப்போது வயது 21, மகள் வில்லோவுக்கு வயது 19.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

12 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்