‘டெனெட்’, ‘வொண்டர் வுமன்’ உள்ளிட்ட திரைப்படங்களின் வெளியீட்டுத் தேதியை வார்னர் பிரதர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது
கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘டெனெட்’. கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான ‘டன்கிர்க்’ படத்திற்குப் பிறகு நோலன் இயக்கிய படம் இது. இப்படத்தில் ஜான் டேவிட் வாஷிங்டன், ராபர்ட் பேட்டின்சன், மைக்கேல் கெய்ன், டிம்பிள் கபாடியா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இப்படத்தின் இரண்டு ட்ரெய்லர்கள் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றன. இப்படத்தை வார்னர் பிரதர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
வரும் ஜூலை மாதம் 17ஆம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட ‘டெனெட்’ திரைப்படம் ஊரடங்கால் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. வார்னர்ஸ் பிரதர்ஸ் நிறுவனத்தின் சமூக வலைதள பக்கங்கங்களில் ரசிகர்கள் பலரும் ‘டெனெட்’ ரிலீஸ் தேதி குறித்து கேள்வியெழுப்பி வந்தனர். அதே போல டிசி காமிக்ஸின் ‘வொண்டர் வுமன்’ திரைப்படத்தின் வெளியீடு குறீத்தும் ரசிகர்கள் கேட்டு வந்தனர்.
» அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு எடுத்த சூரி
» விஜய் சேதுபதியால் இயக்குநர் ஆனேன்: 'பெண்குயின்' இயக்குநர் நெகிழ்ச்சி
இந்நிலையில் ‘டெனெட்’, ‘வொண்டர் வுமன்’ உள்ளிட்ட திரைப்படங்களின் வெளியீட்டுத் தேதியை வார்னர் பிரதர்ஸ் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
டெனெட் திரைப்படம் வரும் இந்த ஆண்டு ஜூலை மாதம் 31ஆம் தேதியும், ‘வொண்டர் வுமன்’ திரைப்படம் வரும் அக்டோபர் மாதம் 2ஆம் தேதியும் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
சினிமா
26 mins ago
சினிமா
2 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago