1953 ஆம் ஆண்டு இயன் ஃப்ளெமிங் உருவாக்கிய ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரம் உலகம் முழுவதும் மிகவும் பிரபலம். 1962 ஆம் ஆண்டு முதல் ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தை அடிப்படையாகக் கொண்டு இதுவரை 24 படங்கள் வெளியாகியுள்ளன. வியக்கவைக்கும் ஆக்ஷன் காட்சிகள், புதிய தொழில்நுட்பங்கள், விறுவிறுப்பான திரைக்கதைகளைக் கொண்ட இப்படங்களுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உண்டு.
கடைசியாக வெளியான நான்கு படங்களில் ஜேம்ஸ் பாண்டாக டேனியல் க்ரெய்க் நடித்து வருகிறார். அடுத்ததாக வெளியாகவுள்ள 'நோ டைம் டு டை', ஜேம்ஸ் பாண்டாக க்ரெய்க் நடிக்கும் கடைசிப் படமாகும். இப்படத்தை கேரி ஜோஜி இயக்கியுள்ளார். சமீபத்தில் வெளியான இப்படத்தின் ட்ரெய்லர் இணையத்தில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இப்படம் உலகம் முழுவதும் கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதி வெளியாகவிருந்தது.
இந்நிலையில் உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் பாதிப்பால் ‘நோ டைம் டு டை’ படத்தின் வெளியீட்டுத் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது..
இந்நிலையில் ‘நோ டைம் டு டை’ படத்தில் ஜேம்ஸ் பாண்ட் கதபாத்திரத்துக்கு ஒரு மகள் இருப்பது போலவும், கரோனா போன்ற ஒரு பெருந்தொற்றை தடுக்க அவர் போராடுவது போலவும் கதை எழுதப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கடந்த வாரம் ஜேம்ஸ் பாண்ட் ‘நோ டைம் டு டை’ படத்தின் கதையின் முக்கியமான பகுதிகள் இணையத்தில் எழுத்து வடிவில் கசிந்தன. அதில் ஜேம்ஸ் பாண்டுக்கு மெடலின் ஸ்வான் என்ற பெண்ணுடன் திருமணமாகி அவர்களுக்கு மெத்தில்டே என்ற 5 வயதும் மகளும் இருப்பதாக இடம்பெற்றிருந்தது. இது இணையத்தில் பெரும் வைரலானது.
அதுமட்டுமின்றி கரோனா வைரஸ் போன்ற ஒரு பெரும் நோய்த்தொற்றை தடுக்கும் வகையில் காட்சிகள் எழுதப்பட்டிருப்பதாகவும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
முக்கிய செய்திகள்
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago