ஹாலிவுட்டில் பிரபல இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன். ‘மெமெண்டோ’, ‘ப்ரஸ்ட்டீஜ்’, ‘டார்க் நைட்’, ‘இன்செப்ஷன்’ என இவர் இயக்கிய படங்கள் பெரும் வரவேற்பைப் பெற்றவை. இவருக்கென்று உலகம் முழுவதும் பெரும் ரசிகர் பட்டாளமே உண்டு. புத்திசாலித்தனமான திரைக்கதையும், ரசிகர்களின் மூளைக்கு வேலை கொடுக்கும் காட்சிகளும் இவரது படங்களில் இடம்பெறும். இவரது படங்களில் கிராபிக்ஸ் காட்சிகள் பெரும்பாலும் இடம்பெறாது.
இவரது இயக்கத்தில் உருவாகியுள்ள ‘டெனெட்’ திரைப்படத்தின் வெளியீடு கரோனா அச்சுறுத்தலால் ஜூலை 17 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இப்படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு காட்சிக்காக ஒரு ‘போயிங் 747’ ரக விமானத்தை விலைக்கு வாங்கி அதை வெடிக்க வைத்துள்ளதாக நோலன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தி ஊடகம் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:
''நான் அந்தக் குறிப்பிட்ட காட்சியை மினியேச்சர் செட் அமைத்து, கிராபிக்ஸின் உதவியோடு படமாக்கிக் கொள்ளலாம் என்றுதான் முதலில் திட்டமிட்டிருந்தேன். இதற்காக கலிபோர்னியா, விக்டர்வில் உள்ளிட்ட பகுதிகளில் லொக்கேஷன் தேடும் பணியில் படக்குழுவினர் ஈடுபட்டிருந்தபோது பழைய விமானங்களின் வரிசையைக் கண்டனர். அப்போதுதான் கிராபிக்ஸ் மற்றும் செட் அமைத்து எடுப்பதைக் காட்டிலும் ஒரு நிஜ விமானத்தை வைத்து இக்காட்சியை கேமராவில் படமாக்கினால் சரியாக இருக்கும் என்று தோன்றியது.
» இளையராஜாவின் மகனை மதம் மாற்றிவிட்டீர்களே: ரசிகர்களின் சீண்டல் கேள்விகளுக்கு யுவனின் மனைவி பதிலடி
» 'மாஸ்டர்' இடைவேளை காட்சி எப்படியிருக்கும்? - ரத்னகுமார் பதில்
இது கேட்பதற்கு விநோதமாக இருந்தாலும் அதைத்தான் நாங்கள் செய்தோம். அது எங்களுக்குச் சரியாகவும் வந்தது. எங்கள் குழுவினரின் உதவியால் அதை வெடிக்க வைத்து நாங்கள் கேமராவில் படமாக்கியுள்ளோம்''.
இவ்வாறு நோலன் கூறியுள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
24 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago