‘ட்வைலைட்’ நடிகர் காதலியுடன் மர்ம மரணம் 

By செய்திப்பிரிவு

‘ட்வைலைட்’ படங்களில் டைலர் க்ரௌலி என்ற கதாபாத்திரத்தின் மூலம் பிரபலமானவர் க்ரிகோரி டைரீ பாய்ஸ் (30). இவர் லாஸ் வேகஸ் நகரில் இருக்கும் தனது வீட்டில் தனது காதலியுடன் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அவரிடமிருந்து எந்தத் தகவல்களும் இல்லாத நிலையில் அவரது சகோதரர் அவரைத் தேடி லாஸ் வேகஸ் சென்றுள்ளார். அவரது வீட்டுக்குள் சென்று பார்த்தபோது டைரீ மற்றும் அவரது காதலி இருவரும் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளனர். டைரீயின் சகோதரர் அளித்த தகவலின் பேரில் போலீஸார் இருவரது உடலையும் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

பிரேதப் பரிசோதனையில் டைரீ மற்றும் அவரது காதலி இருவரும் கடந்த 13 ஆம் தேதியே இறந்துவிட்டார்கள் என்றும், இருவரது மரணத்துக்கான காரணம் இன்னும் உறுதியாகத் தெரியவில்லை என்றும் கூறப்படுகிறது.

டைரீ மிகவும் உற்சாகமான மனிதர், எப்போதும் சுறுசுறுப்புடன் காணப்படுபவர் என்றும் அவர் தற்கொலை செய்திருக்க வாய்ப்பே இல்லை என்றும் அவரது சகோதரர் போலீஸாரிடம் தெரிவித்துள்ளார்.

சினிமா வாய்ப்புகள் தேடுவதற்காக லாஸ் வேகஸ் நகரில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கியிருந்த டைரீக்கு 10 வயதில் ஒரு மகள் இருக்கிறார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

7 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்