ஹாலிவுட் ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்படும் ‘தி பேட்மேன்’ மற்றும் க்றிஸ்டோபர் நோலனின் ‘டெனெட்’ ஆகிய இரண்டு திரைப்படங்களிலும் நடித்துள்ளார் ராபர்ட் பேட்டின்சன். தற்போது இரண்டு படங்களின் வேலைகளுமே கரோனா அச்சுறுத்தலால் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளதால் தற்போது லண்டனில் இருக்கிறார் ராபர்ட் பேட்டின்சன்.
‘தி பேட்மேன்’ மற்றும் ‘டெனெட்’ படங்களில் நடித்த அனுபவம் குறித்து ராபர்ட் பேட்டின்சன் கூறியுள்ளதாவது:
'' ‘தி பேட்மேன்’ படத்தைப் பொறுத்தவரை ஏற்கெனவே பலமுறை பலர் சிறப்பாக நடித்த கதாபாத்திரம் என்பதற்காக நான் அதைத் தேர்ந்தெடுக்கவில்லை. இன்னும் பல வகைகளில் சிறப்பாக அந்தக் கதாபாத்திரத்தில் நடிக்க முடியும் என்பதற்காகவே தேர்ந்தெடுத்தேன்.
பேட்மேனின் இலகிய பதிப்பைப் பார்த்திருக்கிறோம், சோர்வான பதிப்பைப் பார்த்திருக்கிறோம், மிருகத்தனமான பதிப்பைப் பார்த்திருக்கிறோம். ஆனால் அது நம்மைத் திருப்திபடுத்தியே வந்திருக்கிறது. அந்தக் கதாபாத்திரம் ஆளுமைமிக்கது. அது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. நம் வாழ்க்கையில் சில விஷயங்கள் நமக்குக் கிடைப்பதற்கு முன்னதாகவே அது குறித்து நாம் மிகுந்த ஆர்வத்தில் இருப்போம். அது நம்மை மிகவும் உற்சாகப்படுத்தும்.
‘டெனெட்’ படத்தின் படப்பிடிப்பு மிகவும் தலைசுற்றலாக இருந்தது. அதற்காக ஒவ்வொரு நாடாகப் பறக்க வேண்டியிருந்தது. ஒவ்வொரு நாட்டிலும் மிகப்பெரிய செட் அமைக்க வேண்டியிருந்தது. இது ஒரு டைம் டிராவல் படமல்ல''.
இவ்வாறு ராபர்ட் பேட்டின்சன் கூறியுள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago