நெட்ஃப்ளிக்ஸ் தயாரிப்பில் மீண்டும் ‘நார்னியா’?

By செய்திப்பிரிவு

‘தி லயன் விட்ச் அன்ட் தி வார்ட்ரோப்’, ‘பிரின்ஸ் கேஸ்பியன்’, ‘தி கிரேட் டிவோர்ஸ்’ உள்ளிட்ட ஏராளமான புத்தகங்களை எழுதியவர் சி.எஸ்.லெவிஸ். இவரது ‘தி லயன் விட்ச் அன்ட் தி வார்ட்ரோப்’ புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு 2005 ஆம் ஆண்டு வெளியான ‘க்ரோனிக்கில்ஸ் ஆஃப் நார்னியா’ திரைப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றது.

கடந்த 2018 ஆம் ஆண்டு சி.எஸ்.லெவிஸ் எழுதிய புத்தகங்களை திரைப்படம் அல்லது வெப் சீரிஸாக எடுக்க நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் அவரது நிறுவனத்தோடு ஒப்பந்தம் செய்திருந்தது.

இந்நிலையில் சி.எஸ் லெவிஸின் வளர்ப்பு மகனும், ‘நார்னியா’ திரைப்படங்களின் தயாரிப்பாளருமான டக்ளஸ் க்ரெஷாம் சி.எஸ். லெவிஸ் புத்தகங்களை திரையில் கொண்டுவரும் நெட்ஃப்ளிக்ஸின் முயறசி குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து டக்ளஸ் க்ரெஷாம் கூறியுள்ளதாவது:

''சி.எஸ்.லெவிஸ் புத்தகங்கள் பல தொடர்களாக எடுக்கப்படுவது எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. ஏனெனில், ஒரு புத்தகத்தை திரைப்படமாக எடுக்கவேண்டுமென்றால் 2.30 மணி நேரத்துக்குள் ஒரு முழு புத்தகத்தையும் சுருக்க வேண்டும். இதில் பலவற்றை விடவேண்டி வரும். ஆனால் தொடராக எடுக்கும்போது ஒரு புத்தகத்தை அப்படியே எதையும் விடாமல் எடுக்கமுடியும்.

புத்தகங்களை திரைப்படமாக எடுக்கும் நெட்ஃப்ளிக்ஸின் இந்தத் திட்டம் பற்றி இந்த ஒப்பந்தம் போடும்வரை எனக்குத் தெரியாது. அவர்கள் என்னிடம் அது பற்றி ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை''.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

டக்ளஸ் க்ரெஷாம் கூறிய இந்தக் கருத்தால் ‘நார்னியா’ திரைப்படங்கள் நெட்ஃப்ளிக்ஸ் மூலம் மீண்டும் எடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

44 mins ago

சினிமா

5 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்