ஜேம்ஸ் பாண்ட் படங்களில் எம் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை ஜூடி டென்ச். சமீபத்தில் பிரிட்டனின் பிரபலமான வோக் பத்திரிகையின் முகப்பு அட்டையை 85 வயதான ஜூடி டென்ச்சின் புகைப்படம் அலங்கரித்துள்ளது. வோக் அட்டையில் இடம்பெற்ற மிக வயதான நட்சத்திரம் என்ற பெருமையையும் இதன் மூலம் ஜூடி டென்ச் பெற்றார்.
அந்த பத்திரிகைக்கு அளித்துள்ள பேட்டியில், இந்த வயதைப் பற்றி அவருக்குப் பிடித்தமானது எது என்று கேட்கப்பட்டபோது எதுவுமில்லை என்று பதிலளித்துள்ளார் ஜூடி.
"எனக்கு இந்த வயதே பிடிக்கவில்லை. வயதைப் பற்றி நான் நினைக்கவில்லை, நினைக்கவும் விரும்பவில்லை. வயது என்பது ஒரு குணம் என்பார்கள். ஆனால் பயங்கரமாக இருக்கிறது. மேகி ஸ்மித்தை (சக நடிகை) நடுவில் ஒரு நாள் சந்தித்தேன். அவரது கார் ஓட்டுநர் உரிமத்தைப் பறிக்கப்போகிறார்கள் என்ற பயத்தில் அவர் இருந்தார். அப்படி பறிக்கப்படுவது நமது உடலுக்கு ஏற்படும் மிகப்பெரிய அதிர்ச்சி. மோசமான ஒரு விஷயம். மற்றவ்ர்களைச் சார்ந்திருப்பது கொடுமையானது என நினைக்கிறேன்" என்று ஜூடி டென்ச் பேசியுள்ளார்.
கடந்த 2017ஆம் ஆண்டு, பார்வைத் திறன் குறைந்து வருவதால் ஜூடி டென்ச் அவரது கார் ஓட்டுநர் உரிமத்தை விட்டுத் தர வேண்டிய சூழல் உருவானது நினைவுகூரத்தக்கது.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago