ஹாலிவுட் நடிகர் டாம் க்ரூஸ் தனது அடுத்த படத்தின் படப்பிடிப்பை முழுக்க முழுக்க விண்வெளியில் நடத்தவுள்ளார். இதற்காக எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் அவருக்கு உதவுகிறது.
அமெரிக்கத் தொழிலதிபரும், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனருமான எலான் மஸ்க்கின் நிறுவனத்துக்குச் சொந்தமான விண்வெளி நிலையத்தில் இந்தப் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது. ஒரு ஆக்ஷன் சாகசப் படமாக இது இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் எந்த ஹாலிவுட் தயாரிப்பு நிறுவனமும் இந்தப் படத்தில் இணையவில்லை. க்ரூஸும், மஸ்க்கும் சேர்ந்தே இப்படியொரு படத்தை யோசித்ததாகக் கூறப்படுகிறது.
57 வயதான டாம் க்ரூஸ் தனது திரைப்படத்தின் பல ஆபத்தான சண்டைக் காட்சிகளில் டூப் இல்லாமல் நடிப்பார். 'மிஷன் இம்பாசிபிள்' படங்களின் சண்டைக் காட்சிகள் அதற்கு ஒரு சான்று. 'மிஷன் இம்பாசிபிள்' பட வரிசையின் 'கோஸ்ட் ப்ரோட்டாகால்' என்ற பாகத்தில் ஒரு காட்சிக்காக, துபாயின் பூர்ஜ் கலிஃபா கட்டிடத்தில் ஏறினார்.
2018-ம் ஆண்டு, 'ஃபால் அவுட்' பாகத்தில் ஒரு சண்டைக் காட்சியில் நடிக்கும்போது, ஒரு கட்டிடத்திலிருந்து இன்னொரு கட்டிடத்துக்குத் தாவும்போது அவரது கணுக்காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுப் படப்பிடிப்பு சில வாரங்கள் தடைப்பட்டது.
இந்த விண்வெளித் திரைப்படத்திலும் பல்வேறு சாகசக் காட்சிகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டாம் க்ரூஸ் (ஊரடங்குக்கு முன் வரை) அடுத்தடுத்து இரண்டு 'மிஷன் இம்பாசிபிள்' படங்களில் நடித்துக் கொண்டிருந்தார்.
முக்கிய செய்திகள்
சினிமா
5 mins ago
சினிமா
13 mins ago
சினிமா
34 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago