புதிய 'ஸ்டார் வார்ஸ்' படத்தை இயக்கும் டைகா வைடீடி

By ஐஏஎன்எஸ்

'தார் ராக்னராக்' படத்தின் இயக்குநரும், 'ஜோஜோ ரேபிட்' படத்துக்காக சிறந்த தழுவல் திரைக்கதைக்கான ஆஸ்கரை வென்றவருமான டைகா வைடீடி, 'ஸ்டார் வார்ஸ்' திரை வரிசையில் புதிய படத்தை இயக்குகிறார். கடந்த சில மாதங்களால ஹாலிவுட்டில் உலவி வந்த யூகங்கள் தற்போது உண்மையாகியுள்ளன.

இந்தப் படத்தை, '1917' படத்தின் கதாசிரியர் க்ரிஸ்டி வில்சன் கெய்ர்ன்ஸுடன் இணைந்து டைகா வைடீடியும் எழுதுகிறார். முன்னதாக, டிஸ்னி+ ஸ்ட்ரீமிங் சேவையில் வெளியான, ஸ்டார் வார்ஸ் கதையின் அடிப்படையில் உருவான 'தி மேண்டலோரியன்' என்ற வெப் சீரிஸின் இறுதிப் பகுதியை டைகா வைடீடி இயக்கினார். இதற்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. இதை ஒட்டியே தற்போது இவருக்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

டிஸ்னி, ஸ்டார் வார்ஸ் உலகத்தை அடிப்படையாக வைத்தே பல்வேறு கிளைக் கதைகளை உருவாக்கி வருகிறது. இவை அனைத்தும் டிஸ்னியின் பிரத்தியேகமான ஸ்ட்ரீமிங் சேவையான டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் மட்டுமே காணக் கிடைக்கும்.

தற்போது தி மேண்டலோரியன் சீரிஸின் இரண்டாவது சீஸனின் இறுதி கட்ட வேலைகள் நடந்து வருகின்றன. இன்னொரு பக்கம் டிஸ்னி+ ஸ்ட்ரீமிங் சேவைக்காக, 'ரஷ்யன் டால்' வெப் சீரிஸின் இயக்குநர் லெஸ்லீ ஹெட்லேண்ட் ஒரு புதிய சீரிஸை எழுதி, இயக்குகிறார். இதுவும் ஸ்டார் வார்ஸ் உலகத்தின் ஒரு பகுதியாகவே இருக்கும்.

இதோடு, 'ரோக் ஒன்: எ ஸ்டார் வார்ஸ் ஸ்டோரி' கதைக்கு முந்தைய கதையாக ஒரு சீரிஸ் உருவாகிறது. 'ரிவன்ஜ் ஆஃப் தி சித்' மற்றும் 'நியூ ஹோப்' என்ற இரண்டு கதைகளுக்கு நடுவே என்ன நடந்தது என்பதைச் சொல்லும் சீரிஸும் உருவாகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

53 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

5 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்