திக்குமுக்காடிப் போயுள்ளோம் - 'எக்ஸ்ட்ராக்‌ஷன்' வெற்றி குறித்து கிறிஸ் ஹெம்ஸ்வொர்த் நெகிழ்ச்சி

By செய்திப்பிரிவு

'தோர்' உள்ளிட்ட மார்வலின் சூப்பர் ஹீரோ திரைப்படங்கள் மூலம் பிரபலமானவர் கிறிஸ் ஹெம்ஸ்வொர்த். உலகில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவர். இவரது நடிப்பில் 'எக்ஸ்ட்ராக்‌ஷன்' என்ற படம் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் சமீபத்தில் வெளியானது. படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் அதிகமுறை பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றாக மாறியுள்ளது.

இதுகுறித்து 'எக்ஸ்ட்ராக்‌ஷன்' படக்குழுவினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதுகுறித்து க்றிஸ் ஹெம்ஸ்வொர்த் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள ஒரு வீடியோவில் கூறியிருப்பதாவது:

'' 'எக்ஸ்ட்ராக்‌ஷன்' படத்தைப் பார்த்த அனைவருக்கும் மிகப்பெரிய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இப்படத்தை நீங்கள் இந்த கிரகத்திலேயே மிகப்பெரிய படமாக மாற்றியுள்ளீர்கள். இது நெட்ஃப்ளிக்ஸின் நம்பர் ஒன் படமாக மாறப்போகிறது. இது அற்புதமான விஷயம். உங்களை ஆதரவைக் கண்டு திக்குமுக்காடிப் போயுள்ளோம். ருஸ்ஸோ ப்ரதர்ஸ் சார்பாகவும், நெட்ஃப்ளிக்ஸ் சார்பாகவும், இயக்குநர் சாம் ஹார்க்ரேவ் சார்பாகவும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இப்படத்துக்கு இரண்டாம் பாகம் உண்டா என்று பலர் கேட்டிருந்தீர்கள். அதற்கு இப்போதைக்கு என்னிடம் பதில் இல்லை. ஆனால் இவ்வளவு ஆதரவு எனக்கு மிகவும் மகிழ்ச்சியை கொடுக்கிறது''.

இவ்வாறு க்றிஸ் ஹெம்ஸ்வொர்த் கூறியுள்ளார்.

அவெஞ்சர்ஸ் படங்களை இயக்கிய ருஸ்ஸோ ப்ரதர்ஸ் திரைக்கதை எழுதியுள்ள இப்படத்தில் ரந்தீப் ஹோண்டா, பங்கஜ் த்ரிபாதி, பியான்ஷு பைன்யுல்லி, ருத்ராக்‌ஷ் ஜைஸ்வால் உள்ளிட்ட இந்திய நடிகர்களும் நடித்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்