'ஸ்பைடர்மேன்' இரண்டு பாகங்கள்: வெளியீட்டுத் தேதிகள் ஒத்திவைப்பு

By ஏஎன்ஐ

'ஸ்பைடர்மேன் ஃபார் ஃப்ரம் ஹோம்', 'ஸ்பைடர்மேன் இன் டு தி வெர்ஸ்' எனத் தொடர்ச்சியாகத் தயாராகிவரும் இரண்டு ஸ்பைடர்மேன் படங்களின் வெளியீட்டையும் ஒத்திவைப்பதாக சோனி பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

கரோனா நெருக்கடி காரணமாக, ஹாலிவுட்டில் தயாரிப்பில் இருக்கும் அனைத்துப் படங்களின் வேலைகளும் நிறுத்தப்பட்டுள்ளன. இன்னும் சில மாதங்களில் சகஜ நிலை திரும்பினாலும், மக்கள் திரையரங்குகளுக்கு வருவார்களா என்பதே சந்தேகம் என்ற நிலை இருப்பதால் பல்வேறு ஹாலிவுட் படங்களின் வெளியீட்டுத் தேதிகள் மாற்றப்பட்டுள்ளன.

ஏற்கெனவே டிசி, மார்வல் என மற்ற சூப்பர் ஹீரோ படங்களைத் தயாரிக்கும் நிறுவனங்களும் தங்கள் படங்களின் வெளியீட்டை ஒத்திவைப்பதாகத் தொடர்ந்து அறிவித்து வருகின்றன. தற்போது சோனியும் அந்த வரிசையில் இணைந்துள்ளது.

'ஸ்பைடர்மேன் ஃபார் ஃப்ரம் ஹோம்' படத்தின் அடுத்த பாகம் ஜூலை 16, 2021 அன்று வெளியாவதற்குப் பதிலாக நவம்பர் 5, 2021 அன்று வெளியாகும். அதே போல, சோனியின் அனிமேஷன் தயாரிப்பான 'ஸ்பைடர்மேன் இன்டு தி வெர்ஸ்' படத்தின் அடுத்த பாகம், ஏப்ரல் 8, 2022 வெளியீடாக இல்லாமல், அக்டோபர் 7, 2022 அன்று வெளியாகும் என்று சோனி அறிவித்துள்ளது.

சோனி-மார்வல் இணை தயாரிப்பாக, 2019 ஆம் ஆண்டு வெளியான 'ஸ்பைடர்மேன் ஃபார் ஃப்ரம் ஹோம்' மிகப்பெரிய வெற்றி பெற்றதைத் தொடர்ந்து அடுத்த பாகத்துக்காக மக்கள் ஆர்வத்துடன் காத்திருந்தனர். ஆனால் திடீரென சோனி மார்வல் நிறுவனங்களுக்கிடையே பிரச்சினை வந்து பிரிவதாக அறிவிக்கப்பட்டது. மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு தற்போது அடுத்த பாகத்தை இரண்டு தரப்பும் சேர்ந்தே தயாரிக்கிறது.

ஏற்கனவே 'வெனம்' படத்தின் இரண்டாம் பாகத்தின் வெளியீட்டை ஒத்திவைத்து சோனி அறிவிப்பு வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

5 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்