அதிக போதைப்பொருள் மற்றும் ஆயுதங்கள் வைத்திருந்ததாக பிரபல ஹாலிவுட் நடிகர் கைது

By பிடிஐ

அதிக அளவிலான போதைப்பொருட்கள் மற்றும் ஆயுதங்கள் வைத்திருந்ததாக ஹாலிவுட் நடிகர் ஜேஸன் மிச்செல் கைது செய்யப்பட்டுள்ளார்.

அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல நடிகர் ஜேஸன் மிச்செல். ‘ஸ்ட்ரெய்ட் அவுட்ட காம்ப்டன்’ படத்தில் மறைந்த ராப் பாடகர் ஈஸி இ கதாபாத்திரத்தில் நடித்துப் புகழ் பெற்றவர். இதுதவிர ‘காங்: ஸ்கல் ஐலேண்ட்’, ‘டெட்ராய்ட்’, ‘மட்பவுண்ட்’, ‘டிஸாஸ்டர் ஆர்ட்டிஸ்ட்’ உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களிலும், ‘தி சி’ உள்ளிட்ட வெப் சிரீஸ்களிலும் நடித்துள்ளார்.

இந்நிலையில் நேற்று (24.04.20) அமெரிக்காவின் மிஸ்ஸிஸிப்பி மாகாணத்தின் கல்ஃப்போர்ட் என்ற இடத்தில் அதிக அளவில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை வைத்திருந்ததாக போலீஸார் ஜேஸன் மிச்செலைக் கைது செய்தனர்.

சாலையில் வாகன சோதனையின்போது ஜேஸனின் காரில் இந்த போதைப் பொருட்கள் சிக்கியதாகவும், அதோடு 19 பிஸ்டல் ரக துப்பாக்கிகள் மற்றும் ஒரு ஏகே 47 ரகத் துப்பாக்கி உள்ளிட்டவற்றையும் ஜேஸனிடமிருந்து பறிமுதல் செய்துள்ளதாகவும் போலீஸார் தெரிவித்துள்ளனர்.

அவர் மீது அதிக அளவிலான போதைப்பொருட்கள் வைத்திருந்தது, சட்டவிரோதமாக ஆயுதங்களைக் கொண்டுசென்றது உள்ளிட்ட நான்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதற்கு முன்பாக ‘தி சி’ தொடரில் தன்னோடு சேர்ந்து நடித்த இரண்டு நடிகைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அந்த தொடரிலிருந்து ஜேஸன் நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்