’ஹாப்ஸ் அண்ட் ஷா' இரண்டாம் பாகம்: உறுதி செய்த ட்வைன் ஜான்சன்

By ஐஏஎன்எஸ்

'ஹாப்ஸ் அண்ட் ஷா' படத்தின் இரண்டாம் பாகத்துக்கான ஆரம்பக்கட்ட வேலைகள் நடந்து வருவதாகவும், படத்தைத் தான் ஆர்வத்துடன் எதிர்நோக்கியுள்ளதாகவும் நடிகர் ட்வைன் ராக் ஜான்சன் கூறியுள்ளார்.

'ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ்' படத்தின் முக்கியக் கதாபாத்திரங்கள் இரண்டு பேரை மட்டும் வைத்து, கடந்த வருடம் வெளியாகி 759 மில்லியன் அமெரிக்க டாலர்களை வசூலித்த படம் 'ஹாப்ஸ் அண்ட் ஷா'.

முன்னதாக, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது ரசிகர்களிடம் நேரடியாக உரையாடியபோது நடிகர் ட்வைன் ஜான்சனிடம் 'ஹாப்ஸ் அண்ட் ஷா' அடுத்த பாகம் வருமா என்று கேட்கப்பட்டபோது, "அடுத்த 'ஹாப்ஸ் அண்ட் ஷா' படத்தை உருவாக்கி வருகிறோம். ஆர்வத்துடன் எதிர்நோக்கியுள்ளேன். கதை, திரைக்கதை, தொடர்ந்து எப்படி எடுத்துச் செல்லப் போகிறோம் போன்ற விஷயங்கள் விவாதத்தில் உள்ளன" என்று பதிலளித்து உறுதி செய்தார் ஜான்சன்.

ட்வைன் ஜான்சன், ஜேஸன் ஸ்டாதம், ஹெலன் மிர்ரன், இட்ரிஸ் எல்பா உள்ளிட்டோர் நடித்து வெளியான 'ஹாப்ஸ் அண்ட் ஷா' விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. உலக அளவில் கரோனா பாதிப்பு காரணமாக, இந்த வருடம் வெளியாகவிருந்த 'ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ்' திரை வரிசையில் ஒன்பதாவது படமான 'F9', அடுத்த வருடம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. எனவே 'ஹாப்ஸ் அண்ட் ஷா' இரண்டாம் பாகத்தின் வெளியீட்டுத் தேதி குறித்து எதுவும் இன்னும் உறுதி செய்யப்படவில்லை.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்