'பிளாக் விடோ' படத்தை டிஜிட்டல் தளங்களிலேயே வெளியிடலாம் என்று அந்தப் படத்தில் நடித்திருக்கும் நடிகர் டேவிட் ஹார்பர் கூறியுள்ளார்.
'ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ்' வெப் சீரிஸ் மூலம் பிரபலமானவர் டேவிட் ஹார்பர். இவர் 'ஹெல் பாய்', 'சூஸைட் ஸ்குவாட்', 'ஈக்வலைஸர்' உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். மார்வல் சினிமா உலகின் சூப்பர் ஹீரோ பட வரிசையில் அடுத்து வெளியாகவுள்ள 'பிளாக் விடோ' படத்தில் ஹார்பர் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
ஏப்ரல் இறுதியில் 'பிளாக் விடோ' வெளியாகத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், கரோனா பிரச்சினை காரணமாக ஒத்திவைக்கப்பட்ட எண்ணற்ற திரைப்பட வெளியீடுகளில் ’பிளாக் விடோ’வும் அடக்கம். இந்தப் பிரச்சினை எப்போதும் தீரும் என்பது இதுவரை தெளிவாகவில்லை என்பதால் ’பிளாக் விடோ’வும் எப்போது வெளியாகும் என்பது தெரியாது.
அண்மையில் டேவிட் ஹார்பர் இன்ஸ்டாகிராம் தளத்தில் தனது ரசிகர்களுடன் உரையாடினார். அப்போது பட வெளியீடு பற்றிப் பேசுகையில், "படம் தள்ளிவைக்கப்பட்டது குறித்து எனக்கு மின்னஞ்சல் வந்தது. நான் அதிர்ச்சி தெரிவித்தேன். படத்தை நாம் அனைவரும் ஏன் டிஜிட்டல் வெளியீட்டில் பார்க்கக்கூடாது? ஆனால் அந்த முடிவெல்லாம் நான் எடுக்கக் கூடியது அல்ல" என்று கூறியுள்ளார்.
கரோனா தொற்று பீதியால்தான் 'ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ்' தொடரின் நான்காவது சீஸனும் தள்ளிவைக்கப்பட்டிருப்பதாக ஹார்பர் கூறியுள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
6 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago