சூப்பர்மேன் அல்லது ஸ்பைடர்மேனாக நடிப்பது தனது சிறுவயதுக் கனவு என்று கூறியுள்ளார் நடிகர் டேனியல் க்ரெய்க்.
ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் சர்வதேச புகழ் பெற்றவர் நடிகர் டேனியல் க்ரெய்க். இவர் அந்த கதாபாத்திரத்தில் தோன்றும் கடைசி படமான 'நோ டைம் டு டை', ஏப்ரல் மாதம் வெளியாகவிருந்தது. கரோனா அச்சத்தால் இந்தப் படத்தின் வெளியீடு நவம்பர் மாதம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் ஒரு பத்திரிகைக்கு டேனியல் க்ரெய்க் அளித்துள்ள பேட்டியில், "பலரும் என்னிடம், 'நீங்கள் சிறுவயதிலேயே ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்று கனவு கண்டிருப்பீர்கள் தானே' என்று கூறுகின்றனர்.
அதற்கு பதில், இல்லை. நான் அப்படி நினைத்ததே இல்லை. அதைத் தாண்டி பல்வேறு கனவுகள் இருந்தன. சூப்பர்மேனாக, ஸ்பைடர் மேனாக, இன்விசிபிள் மேனாக நடிக்க வேண்டு என்பது என் கனவு. அந்தக் கால கௌபாய் வேடமும் என் கனவு. ஆனால் பாண்ட் பற்றி நினைத்ததில்லை. அப்படி நினைத்து இப்படி நடப்பதுதான் இப்போது முரணாக இருக்கிறது"
» கரோனா பரிசோதனையைத் தவிர்த்த கனிகா கபூர்: சக பாடகி சோனா மோஹபத்ரா கடும் சாடல்
» கரோனா அச்சம்; இளைஞர்களே தயவுசெய்து அணுகுமுறையை மாற்றிக் கொள்ளுங்கள்: தனுஷ் அறிவுரை
'கேசினோ ராயல்', 'குவாண்டம் ஆஃப் சோலஸ்', 'ஸ்கைஃபால்', 'ஸ்பெக்டர்' ஆகியப் படங்களைத் தொடர்ந்து 'நோ டைம் டு டை', டேனியல் க்ரெய்க் ஐந்தாவது முறையாக ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம்.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago