ஜேம்ஸ் பாண்ட் திரைப்படமான ‘குவாண்டம் ஆஃப் சொலாஸ்’, டாம் க்ரூஸ் நடித்த ‘ஒபிலிவியான்’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள ஓல்கா குரிலென்கோ என்ற நடிகைக்கு கோவிட் 19 வைரஸ் காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
சீனாவின் வூஹான் நகரில் பரவத் தொடங்கிய கோவிட் - 19 வைரஸ் காய்ச்சல், தற்போது நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் தீவிரமாகப் பரவி வருகிறது. இந்த வைரஸ் காய்ச்சலுக்கு உலகம் முழுவதும் இதுவரை 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கின்றனர். ஒன்றரை லட்சத்துக்கும் மேற்பட்டோர் இந்த வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதன் காரணமாக, கோவிட் - 19 வைரஸை ‘உலகளாவிய நோய்த் தொற்று' என உலக சுகாதார நிறுவனம் அண்மையில் அறிவித்தது. இந்த வைரஸ் பரவுவதைத் தடுக்க பல்வேறு நாடுகளும் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
கடந்த வாரம் பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் ஹாங்க்ஸ் தானும் தன்னுடைய மனைவியும் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருப்பதால் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை மேற்கொண்டு வருவதாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.
» கரோனா வைரஸ் பற்றிப் பயப்படாதீர்கள்: விஜய் சேதுபதி
» கடவுளுக்கும் மனிதனுக்கும் இடையே மதம் அவசியமில்லாதது: விஜய் சேதுபதி
இந்நிலையில் ஜேம்ஸ் பாண்ட் திரைப்படமான ‘குவாண்டம் ஆஃப் சொலாஸ்’, டாம் க்ரூஸ் நடித்த ‘ஒபிலிவியான்’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள ஓல்கா குரிலென்கோ என்ற நடிகைக்கு கோவிட் 19 வைரஸ் காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
கோவிட்-19 வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பது குறித்த அவர் வெளியிட்டுள்ள பதிவில், '' கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்ட பிறகு வீட்டில் அடைபட்டிருக்கிறேன். கிட்டத்தட்ட ஒருவாரமாகவே எனக்கு உடல்நிலை சரியாக இல்லை. கடும் சோர்வும், காய்ச்சலும் முக்கிய அறிகுறிகள். இதைக் கவனத்தில் கொண்டு உங்கள் உடல்நலனில் அக்கறை எடுத்துக் கொள்ளுங்கள்'' என்று ஓல்கா குரிலென்கோ தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago