ஸ்டார் வார்ஸ் படங்கள் அயற்சியை ஏற்படுத்துகின்றன - லியாம் நீசன் 

By செய்திப்பிரிவு

ஸ்டார் வார்ஸ் படங்கள் மிகுந்த அயற்சியை ஏற்படுத்துவதாக பிரபல ஹாலிவுட் நடிகர் லியாம் நீசன் தெரிவித்துள்ளார்.

பிரபல ஹாலிவுட் நடிகர் லியாம் நீசன். இவர் ‘டேக்கன்’, ‘நான் ஸ்டாப்’, ‘லெஸ் மிஸரபிள்ஸ்’ உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்றவர்.

கடந்த 2005ஆம் ஆண்டு கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் வெளியான பெரும் வெற்றி பெற்ற ‘பேட்மேன் பிகின்ஸ்’ படத்தின் வில்லனாக நடித்திருந்தார்.

இந்நிலையில், ஒரு தனியார் ஊடகத்துக்கு லியாம் நீசன் பேட்டியளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

‘நான் சூப்பர்ஹீரோ படங்களுக்கு பெரிய ரசிகனெல்லாம். இனி சூப்பர்ஹீரோ வகை படங்களில் நடிக்கமாட்டேன். எதிர்காலத்திலும் அது குறித்த எந்த திட்டமும் இல்லை. சிறப்பான தொழிநுட்பங்கள், இன்னபிற நல்ல விஷயங்கள் எல்லாம் அவற்றில் இருந்தாலும், ஒரு வெல்க்ரோ உடைக்குள் என்னை திணித்துக் கொள்வதற்காக தினமும் மூன்று மணி நேரம் செல்லும் எண்ணம் எனக்கு இல்லை. அதை அற்புதமாக செய்யும் நடிகர்களை நான் மதிக்கிறேன். ஆனால் அது எனக்கு ஏற்ற ஒன்று இல்லை.

அதே போல இனி ஸ்டார் வார்ஸ் படங்களிலும் இனி நடிக்கும் எண்ணம் எனக்கு இல்லை. 22 வருடங்களுக்கு முன்பு நான் நடிக்கும்போது அப்படங்கள் ஒரு நாவலாகவும் புதிதாகவும் இருந்தது. ஆனால் அவற்றில் நடிப்பது மிகவும் அயற்சியாக இருக்கிறது.’

இவ்வாறு லியாம் நீசன் கூறியுள்ளார்.

1999ஆம் ஆண்டு வெளியான ‘ஸ்டார் வார்ஸ்: எபிசோட் 1 தி ஃபாண்டம் மெனஸ்’ என்ற படத்தில் லியாம் நீசன் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

11 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்