கரோனா வைரஸ் தாக்குதலால் ‘நோ டைம் டு டை’ பட விளம்பரத்துக்கான சீனப் பயணத்தை ஜேம்ஸ் பாண்ட் உள்ளிட்ட படக்குழுவினர் ரத்து செய்துள்ளனர்.
1953 ஆம் ஆண்டு இயன் ஃப்ளெமிங் உருவாக்கிய ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரம் உலகம் முழுவதும் மிகவும் பிரபலம். 1962 ஆம் ஆண்டு முதல் ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தை அடிப்படையாகக் கொண்டு இதுவரை 24 படங்கள் வெளியாகியுள்ளன. வியக்கவைக்கும் ஆக்ஷன் காட்சிகள், புதிய தொழில்நுட்பங்கள், விறுவிறுப்பான திரைக்கதைகளைக் கொண்ட இப்படங்களுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உண்டு.
கடைசியாக வெளியான நான்கு பாண்ட் படங்களில் ஜேம்ஸ் பாண்டாக டேனியல் க்ரெய்க் நடித்து வருகிறார். அடுத்ததாக வெளியாகவுள்ள 'நோ டைம் டு டை', ஜேம்ஸ் பாண்டாக க்ரெய் நடிக்கும் கடைசிப் படமாகும். இப்படத்தை கேரி ஜோஜி இயக்கியுள்ளார். சமீபத்தில் வெளியான இப்படத்தின் ட்ரெய்லர் இணையத்தில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இப்படம் உலகம் முழுவதும் வரும் ஏப்ரல் 8 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இப்படத்துக்கான ப்ரீமியர் காட்சிகள் மற்றும் படத்தின் விளம்பரத்துக்கான சுற்றுப்பயணத்தை உலக நாடுகளில் மேற்கொள்ள படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.
இந்நிலையில் உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் பாதிப்பால் சீனாவில் நாள்தோறும் நூற்றுக்கணக்கான மக்கள் உயிரிழந்து வருகின்றனர். இதனைக் கருத்தில் கொண்டு சீனாவின் பெய்ஜிங் நகரில் நடைபெறவிருந்த ‘நோ டைம் டு டை’ படத்தின் சிறப்புத் திரையிடல் மற்றும் சீனாவின் முக்கிய நகரங்களில் மேற்கொள்ளவிருந்த சுற்றுப்பயணம் ஆகியவை ரத்து செய்யப்படுவதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
இதுகுறித்து ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் ‘நோ டைம் டு டை’ படக்குழுவினர் கூறும்போது, “படத்தின் நாயகன் டேனியக் க்ரெய்க் உள்ளிட்ட நடிகர்கள் யாரும் சீனாவில் ஏப்ரல் மாதம் நடக்கவுள்ள திரையிடல்களில் கலந்து கொள்ளவோ அல்லது சுற்றுப் பயணங்களோ மேற்கொள்ள மாட்டார்கள்” என்றனர்.
இதுவரை சீனாவில் கரோனா வைரஸுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 1770-ஐக் கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
சினிமா
4 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago