பழைய கார்ட்டூன் படங்களை டிஸ்னி நிறுவனம் ரீமேக் செய்து வருவது தன்னைக் குழப்பமடையச் செய்வதாக டிஸ்னி கார்ட்டூன் பட இயக்குநரான ஜான் மஸ்கர் கூறியுள்ளார்.
2010 ஆம் ஆண்டு 'ஆலிஸ் இன் வொண்டர்லேண்ட்' படத்திலிருந்து டிஸ்னி நிறுவனம் தனது பிரபலமான அனிமேஷன் / கார்ட்டூன் திரைப்படங்களை நவீன காலத்துக்கு ஏற்றவாறு நடிகர்களை வைத்தோ அல்லது தத்ரூப அனிமேஷனாகவோ மீண்டும் தயாரித்து வருகிறது.
அந்த வரிசையில் ‘தி லயன் கிங்’, ‘அலாவுதீன்’, ‘பியூட்டி அன்ட் தி பீஸ்ட்’, ‘ஜங்கிள் புக்’ உள்ளிட்ட பல க்ளாஸிக் கார்ட்டூன் படங்கள் திரைப்படங்களாக உருப்பெற்று உலகம் முழுவதும் நல்ல வரவேற்பை பெற்றன.
இந்நிலையில் டிஸ்னி நிறுவனத்தில் பல ஆண்டுகளாக அனிமேஷன்/ கார்ட்டூன் படங்களின் இயக்குநராகப் பணியாற்றிய ஜான் மஸ்கர் பழைய கார்ட்டூன் படங்களை திரைப்படங்களாக ரீமேக் செய்வது குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
தனியார் நாளிதழ் ஒன்றுக்கு ஜான் மஸ்கர் அளித்துள்ள பேட்டியில், ''டிஸ்னியின் தற்போதைய ரீமேக்குகள் என்னைக் குழப்பமடையச் செய்கின்றன. ‘மலாஃபிஸண்ட்’ போன்ற மிகப்பெரிய வெற்றிப்படங்களாக அறியப்படுபவை கூட அதன் மூலத்தை மறுபரிசீலனை செய்ய வைக்கின்றன. ஜான் ஃபேவரூ ஒரு புத்திசாலித்தனமான இயக்குநர். ஆனா கையால் வரையப்பட்ட ‘லயன் கிங்’ கார்ட்டூனிலிருந்து காட்சிக்கு காட்சிக்கு அப்படியே நகலெடுக்கப்பட்ட இந்த அனிமேஷன் படத்துடன் (லயன் கிங் 2019) என்னால் ஒன்ற முடியவில்லை.
அதற்குப் பதிலாக இன்னும் பல அசல் கதைகளை, குறிப்பாக பழங்காலக் கதைகளை அதன் கரு சிதையாமல் திரைப்படமாகக் காண விரும்புகிறேன்'' என்று ஜான் மஸ்க் கூறியுள்ளார்.
டிஸ்னி நிறுவனம் ‘லயன் கிங்’, ‘ஜங்கிள் புக்’, அலாவுதீனைத் தொடர்ந்து ‘முலன்’, ‘பாம்பி’, ‘லிட்டில் மெர்மெய்ட்’ ஆகிய கார்ட்டூன் படங்களை ரீமேக் செய்து வருகிறது.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago