’பாம்பி’ படத்தை மீண்டும் கையிலெடுக்கும் டிஸ்னி

By செய்திப்பிரிவு

’ஜங்கிள் புக்’, ’அலாதீன்’ படங்களைத் தொடர்ந்து ’பாம்பி’ கார்டூன் திரைப்படத்தை லைவ் ஆக்‌ஷன் முறையில் தயாரிக்கிறது.

2010ஆம் ஆண்டு ’ஆலிஸ் இன் வொண்டர்லேண்ட்’ படத்திலிருந்து டிஸ்னி நிறுவனம் தனது பிரபலமான அனிமேஷன் / கார்டூன் திரைப்படங்களை நவீன காலத்துக்கு ஏற்றவாறு நடிகர்களை வைத்தோ அல்லது தத்ரூப அனிமேஷனாகவோ மீண்டும் தயாரித்து வருகிறது.

அந்த வரிசையில் தற்போது ’பாம்பி’ என்ற கார்டூன் படத்தை லைவ் ஆக்‌ஷன் முறையில் மீண்டும் தயாரிக்கிறது டிஸ்னி. 1942-ஆம் ஆன்டு வெளியான இந்தப் படம் ’ஜங்கிள் புக்’, ’லயன்கிங்’ போல தத்ரூப அனிமேஷன் முறையில் தயாராகிறது. ’கேப்டன் மார்வல்’ பட கதாசிரியர் ஜெனெவா ராபர்ட்சன் - ட்வோரட் திரைக்கதை எழுதுகிறார் .

முன்னதாக ’பியூட்டி அண்ட் தி பீஸ்ட்’, ’அலாதின்’, ’லயன் கிங்’, ’லேடி அண்ட் தி ட்ராம்ப்’ உள்ளிட்ட அனிமேஷன் படங்களை லைவ் ஆக்‌ஷன் முறையில் தயாரித்தது. இந்த வருடம் ’முலன்’, ’க்ரூயெல்லா’ உள்ளிட்ட திரைப்படங்கள் வெளியாகவுள்ளன. ’தி லிட்டில் மெர்மெட்’ படத்தையும் மீண்டும் தயாரிக்கத் திட்டமிடப்பட்டு வருகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்