இந்தியாவில் மீண்டும் வெளியாகும் ‘ஒன்ஸ் அபான் எ டைம் இன் ஹாலிவுட்’ திரைப்படம்

By செய்திப்பிரிவு

க்வெண்டின் டாரண்டினோ இயக்கிய ‘ஒன்ஸ் அபான் எ டைம் இன் ஹாலிவுட்’ திரைப்படம் மீண்டும் இந்தியாவில் வெளியாகிறது.

லியார்னாடோ டிகாப்ரியோ, ப்ராட் பிட் நடித்த ‘ஒன்ஸ் அபான் எ டைம் இன் ஹாலிவுட்’ திரைப்படம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளியானது. க்வெண்டின் டாரண்டினோ இயக்கிய இப்படம் உலகமெங்கும் நல்ல வரவேற்பைப் பெற்றது.

1960களின் கதைக்களத்தைக் கொண்ட இப்படம் ஹாலிவுட் நடிகை ஷாரோன் டேட்ஸ் கொலையின் பின்னணியை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டது. இப்படத்தில் ப்ரூஸ் லீயை அவமானப்படுத்திவிட்டார்கள் என அவரது மகள் ஷானோன் லீ இப்படத்தின் இயக்குநர் டாரண்டினோவைக் கடுமையாக விமர்சித்திருந்தார்.

இந்த ஆண்டுக்காக ஆஸ்கர் விருதுக்காக சிறந்த நடிகர், சிறந்த இயக்குநர், சிறந்த படம் உள்ளிட்ட 9 பிரிவுகளில் இப்படம் போட்டியிடுகிறது. வெற்றி பெறும் படங்களுக்கு விருது வழங்கும் நிகழ்வு வரும் பிப்ரவரி மாதம் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறவுள்ளது.

இதைக் கருத்தில் கொண்டு ‘ஒன்ஸ் அபான் எ டைம் இன் ஹாலிவுட்’ படத்தை பிப்ரவரி 14 ஆம் தேதி இந்தியாவில் மீண்டும் வெளியிட சோனி பிக்சர்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது. இப்படம் ஆஸ்கருக்குப் பரிந்துரைப்பட்டிருப்பதால் இப்படத்தை மீண்டும் திரையிடுவது படத்துக்கு நல்ல வரவேற்பைத் தரும் என்று படக்குழுவினர் கருதுவதாக ஹாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்